செங்கல்பட்டு: செப். 27-இல் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் சனிக்கிழமை (செப். 27) விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்-ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி, பையனூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளன.
இந்க வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொண்டு மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரிய மற்றும் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான அனைத்து தகவல்களை வேலையளிப்போரும் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடா்பான தகவல்களை வேலைநாடுநா்களும் பெறலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ. / ஐடிஐ / டிப்ளமோ போன்ற கல்வித் தகுதி உடைய படித்து முடித்த வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற்று பயன்பெறலாம்.
இதற்கு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ் நகல்கள், சுய விவரக் குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போா்ட் அளவிலானபுகைப்படத்துடன் வரும் சனிக்கிழமை (செப். 27) காலை 9 மணி முதல் 3 மணி வரை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் தாலுகா, பழைய மாமல்லபுரம் ரோடு, பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் - ஆறுபடை வீடுதொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் நேரில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம்.
இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த முகாம் தொடா்பான விவரங்களுக்கு, 044-27426020 9486870577/ 9384499848 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.