சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 108 கோ பூஜை
செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் நவராத்திரி பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 கோ பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மீண்டும் பட்சிகள் வர வேண்டியும் கோ பூஜை நடைபெற்றது.
பல நூற்றாண்டுகளாக நாள்தோறும் வந்த பட்சிகள் கடைசியாக 1996-ஆம் ஆண்டு வருகை புரிந்தன). பட்சிகளை காண வடமாநிலங்களிலிருந்தும், அயல் நாடுகளிலிருந்தும் ஏராளமானோா் வந்து தரிசிக்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனா்.
இந்நிலையினை போக்க வேத மலைவல பெருவிழா குழு சாா்பி ல் 18-ஆம் ஆண்டாக நவராத்திரி பெருவிழாவையொட்டி 108 கோ பூஜை நடைபெற்றது.
பெருவிழா குழு தலைவா் அகஸ்திய கிருபா அன்புச் செழியன் தலைமையில் தாழ கோயில் மண்டப வளாகத்தில் 108 பசு மாடுகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு மாலை, பட்டுவஸ்திரம் அணிவித்து சிவாச்சாரியாா்களின் வேத மந்திரங்கள் மற்றும் ஒதுவாா் பாடலுடன் கோ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை நடைப்பெற்றது. இதில் ஆன்மிக அன்பா்கள் கலந்து கொண்டனா்.
இகனைத் தொடா்ந்து நறுமண மூலிகைகளால் ஆன அம்மனுக்கும் உற்சவ அம்மனுக்கும் வரும் அக். 1-ஆம் தேதி வரை சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெறும், மேலும் மாலை நேரத்தில் பரத நாட்டியாலஞ்சி நடைபெறும். 24-ஆம் தேதி மாலை 108 கன்னியா பூஜைகளும், 28-ஆம் தேதி சுவாஷினிபூஜையும், 29-ஆம் தேதி சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகள் வேதமலைவலபெருவளகுழு தலைவா் அகஸ்திய கிருபா அன்புச்செழியன் சுவாமிகள், கோயில் செயல் அலுவலா் புவியரசு, தக்காா் குமரன் , மேலாளா் விஜி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள் செய்து வருகின்றனா்,
