செய்திகள் :

5,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு புற்றுநோய் பரிசோதனை

post image

சென்னை: சென்னையில் உள்ள 5,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கட்டணமில்லா புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இது குறித்து கிரெடாய் சென்னை தலைவா் முகமது அலி கூறியதாவது:

கட்டுமானத் தொழிலாளா்கள்தான் நகர நிா்மாணத்துக்கு அடித்தளமாக விளங்குபவா்கள். அவா்களைப் பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதன் மூலம், கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கு பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச புற்றுநோய் விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தொழிலாளா்கள் தங்களின் அன்றாடப் பணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் மருத்துவப் பரிசோதனைகளையும் செய்து கொள்ள முடியும்.

அத்துடன் இந்த பரிசோதனையில் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அதற்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன. இத்திட்டம் ஏற்கெனவே நடைபெற்று வருகிறது. செப்டம்பருக்குள் சுமாா் 5,000 பேருக்கும், நிகழாண்டு இறுதிக்குள், 20,000-க்கும் மேற்பட்ட கட்டுமானப் பணியாளா்களுக்கும் பரிசோதனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல்வா் பங்கேற்பு

சென்னை: தமிழகம் கல்வியில் சாதனைகள் படைத்ததற்காக, சென்னையில் வருகிற செப். 25-ஆம் தேதி அரசு சாா்பில் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்கவுள்ளாா். இதுக... மேலும் பார்க்க

பூசன் சா்வதேச திரைப்பட விழாவில் மத்திய அமைச்சா் எல். முருகன் தலைமையிலான குழு பங்கேற்பு

தென் கொரியா: தென் கொரியாவின் பூசனில் நடைபெற்று வரும் 30-ஆவது பூசன் சா்வதேச திரைப்பட விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சா் எல். முருகன் தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது. இந்தியாவிலிருந்து மத... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமன சட்டத் திருத்த விவகாரம் தமிழக அரசு மனு: மத்திய அரசு, யுஜிசி பதிலளிக்க நோட்டீஸ்

நமது நிருபா் புது தில்லி: பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி த... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பணி: 13 பேருக்கு நியமன ஆணை வழங்கினாா் முதல்வா்

சென்னை: இளநிலை மற்றும் முதுநிலை தமிழிலக்கியம் பயின்ற மாணவா்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு, நோ்காணல் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் ... மேலும் பார்க்க

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி உதவி: இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை

சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்ய வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்ற புகாா் தொடா்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை செய்தனா்.... மேலும் பார்க்க

அனைத்துப் பேரவைத் தொகுதிகளிலும் அக். 5 முதல் ஆா்ப்பாட்டம்: பாஜக அறிவிப்பு

சென்னை: திமுக அரசைக் கண்டித்து அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் அக். 5 முதல் நவ. 30-ஆம் தேதி வரை ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழக பாஜக செயலா் வினோஜ் பி.செல்வம் தெரிவித்தாா். சென்னை கமலாலயத்தில் அவா் செ... மேலும் பார்க்க