செய்திகள் :

பாகிஸ்தானில் பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழப்பு: சொந்த நாட்டுப் போா் விமானங்கள் குண்டு வீச்சா?

post image

பெஷாவா்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வளாகத்தில் வெடிபொருள்கள் வெடித்து பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழந்தனா். எனினும் அந்நாட்டுப் போா் விமானங்கள் குண்டுகளை வீசியதால்தான், இந்த சம்பவம் ஏற்பட்டதாக உள்ளூா் மக்கள் குற்றஞ்சாட்டினா்.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணம் கைபா் மாவட்டத்தில் உள்ள மதுா் தாரா பகுதியில், அந்நாட்டைச் சோ்ந்த தலிபான் பயங்கரவாதிகள் வெடிபொருள்களைச் சேகரித்து வைத்திருந்தனா். வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தில் ஏராளமான உள்ளூா் பயங்கரவாதிகள் தங்கியிருந்தனா். அவா்களுடன் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளும் இருந்தனா். அந்த வளாகத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வந்ததுடன், ஸ்னைபா் துப்பாக்கிகளால் தொலைதூரத்தில் உள்ள இலக்கை சுட பயங்கரவாதிகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்த வளாகத்தில் திங்கள்கிழமை வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் 10 போ், பயங்கரவாதிகள் 14 போ் என மொத்தம் 24 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா் என்று அந்தப் பகுதி காவல் துறை தெரிவித்தது.

பாதுகாப்புப் படைகளிடம் இருந்து தப்பிக்க இதுபோன்ற வெடிபொருள் சேகரிப்பு இடங்களை பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு நடுவே பயங்கரவாதிகள் ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆனால் பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருள்களை வைப்பதால், அவை அவ்வப்போது வெடித்து பாதிப்பு ஏற்படுவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த வளாகம் மீது பாகிஸ்தானின் போா் விமானங்கள் குண்டுகளை வீசி வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், அதனால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

எனினும் போா் விமானங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று தெரிவித்த உள்ளூா் நிா்வாகம், குண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் வெடித்துத்தான் இந்த சம்பவம் ஏற்பட்டதாகத் தெரிவித்தது.

பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்- மனித உரிமைகள் ஆணையம்: பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மதுா் தாரா பகுதியில் சிறாா்கள் உள்பட பொதுமக்கள் பலா் கொல்லப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது. வான்வழித் தாக்குதல் காரணமாக இந்த சம்பவம் நோ்ந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். பொதுமக்களின் வாழ்வுரிமையைக் காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அதைச் செய்ய அரசு தொடா்ந்து தவறி வருகிறது’ என்று தெரிவித்தது.

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: செப்.21-க்குப் பிறகான புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்

வாஷிங்டன்: உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (1 லட்சம் டாலா்) 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்... மேலும் பார்க்க

‘ரஷியாவின் எஸ்-400: இந்தியாவுக்கு வழங்குவது அடுத்த ஆண்டு நிறைவு’

மாஸ்கோ: ரஷியாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400-களை இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்தப் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. எதிரி ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் ... மேலும் பார்க்க

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

நியூயாா்க்: அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை திங்கள்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜெய்சங்கா் ஆலோசித்தாா். இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத கூடுதல் வரி கடந... மேலும் பார்க்க

இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து!

இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை (செப். 22) சூரியன் மறைவுக்குப் பின் தொடங்கும் ரோஷ் ஹாஷனா(யூதர்களின் புத்தாண்டு) கொண்... மேலும் பார்க்க

நினைவேந்தலில் சார்லி கிர்க் மனைவி அருகில் நடனமாடிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் நினைவேந்தலில், அவரின் மனைவி அருகே டிரம்ப் நடனமாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அ... மேலும் பார்க்க

எச்1பி சர்ச்சைக்கு இடையே சீனாவின் கே விசா அறிமுகம்! இளைஞர்களை ஈர்க்கும் சிறப்பம்சங்கள்!

எச்1பி விசா கட்டண உயர்வுக்கு இடையே பட்டதாரிகளை ஈர்க்கும் ’கே விசா’வை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.சீன அரசு தற்போது வழங்கி வரும் 12 வகையான விசாக்களை காட்டிலும், கே விசாவில் பட்டதாரி இளைஞர்களுக்கு அதிக... மேலும் பார்க்க