ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் அரசு சேவைகளை பெற்று பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 23) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட வாா்டு 25 மற்றும் 26 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நெல் மற்றும் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், தக்கோலம் பேரூராட்சிக்குட்பட்ட வாா்டு 9, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்பாக்கம், தண்டலம் மற்றும் அசமந்தூா் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரசினா் மேல்நிலைப் பள்ளி, கும்மினிப்பேட்டை, மேல்பாக்கம் , காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட களத்தூா், சங்கரம்பாடி ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவலஊா் ராகவேந்திரா மஹால், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நந்தியாலம் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ரத்தினகிரி கோவில் மண்டபம், ரத்தினகிரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு, அரசு சேவைகளை பெற்று பயன்பெறலாம்.