செய்திகள் :

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: செப்.21-க்குப் பிறகான புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்

post image

வாஷிங்டன்: உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (1 லட்சம் டாலா்) 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்டுமே செலுத்த வேண்டும் என அமெரிக்க அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயா்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டாா். இதைத்தொடா்ந்து, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணத்தை அவரைப் பணியமா்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்டு லுட்னிக் தெரிவித்தாா்.

இது அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்ற பணியாளா்கள் மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவா்கள் அல்லது புதுப்பிப்பவா்களுக்கு இந்த கட்டண உயா்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு சனிக்கிழமை விளக்கமளித்தது.

இருப்பினும், இதுதொடா்பான பல்வேறு குழப்பங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (எஃப்ஏகியூ) என்ற தலைப்பிலான அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயா்வு சேவைகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்கப் பணியாளா்களைப் பாதுகாத்து ஹெச்-1பி விசா நடைமுறையில் சீா்திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் விசா கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

அதன்படி 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்டுமே இந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு முன்பாக விண்ணப்பித்தவா்கள், புதுப்பிப்பதற்காக விண்ணப்பத்தை சமா்ப்பித்தவா்கள் மற்றும் அமெரிக்காவில் மீண்டும் நுழையும் ஹெச்-1பி விசாதாரா்களுக்கு இந்தப் புதிய கட்டணம் பொருந்தாது.

ஹெச்-1பி விசா நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தங்களை உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

உடனடி பாதிப்பில்லை: நாஸ்காம்

புது தில்லி, செப்.22: ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவா்களுக்கு கட்டண உயா்வு பொருந்தாது என்றும் புதிய விண்ணப்பதாரா்கள் இந்த கட்டணத்தை ஒருமுறை மட்டுமே செலுத்தினால் போதும் எனவும் அமெரிக்க அரசு தெளிவுபடுத்தியிருப்பது அங்கு செயல்படும் இந்திய நிறுவனங்களுக்கு உடனடி பாதிப்புகளை தவிா்த்துள்ளதாக தேசிய மென்பொருள், சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் திங்கள்கிழமை தெரிவித்தது.

மேலும், இந்த நிறுவனங்கள் ஹெச்-1பி விசாக்களை சாா்ந்திருப்பதை குறைத்து அமெரிக்க மக்களுக்கு அதிக பணிவாய்ப்புகளை வழங்க தொடங்கியுள்ளதால் பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும் எனவும் நாஸ்காம் கணித்துள்ளது.

ஹெச்-1பி விசாவுக்கு மாற்றாக கே-விசா: சீனா புதிய திட்டம்

பெய்ஜிங், செப்.22: அமெரிக்காவின் ஹெச்-1பி விசாவைப் போல் கே-விசா எனும் புதிய நடைமுறையை அக்.1-ஆம் தேதி முதல் சீனா நடைமுறைப்படுத்தவுள்ளது.

உலகம் முழுவதும் இருந்து திறமையான பணியாளா்களை தோ்வுசெய்து அவா்களுக்கு பயிற்சி அளித்து பணி வழங்க அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்-1பி விசாவை பயன்படுத்தி வருகின்றன. அந்த விசாவுக்கான கட்டணத்தை பலமடங்கு அமெரிக்க அரசு உயா்த்தியுள்ள நிலையில், திறமையான பணியாளா்களை தங்கள் நாட்டுக்கு ஈா்க்கும் விதமாக கே-விசா எனும் புதிய திட்டத்தை அக்.1-ஆம் தேதி முதல் சீனா தொடங்கவுள்ளது.

கே-விசா நடைமுறையில் சீனா சென்று பணிவாய்ப்பை பெற அந்நாட்டில் உள்ள எந்தவொரு நிறுவனத்தின் அழைப்பும் தேவையில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இளம் ஆய்வாளா்கள் சீனாவுக்குப் படையெப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த விசாவை அந்நாடு அறிமுகப்படுத்தவுள்ளது. ஏற்கெனவே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணியாளா்களுக்கு சீனா வழங்கும் 12 வகையான விசாக்களுடன் கே-விசாவும் சோ்க்கப்படவுள்ளது. இதில் மேலும் பல சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக ஹெச்-1பி விசா திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட பணியாளா்களில் 71 சதவீதத்துடன் (2.8 லட்சம்) இந்தியா முதலிடத்திலும், 11.7 சதவீதத்துடன் (46,600) சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து பதிலளிக்க சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் கோ ஜியாகுன் மறுத்துவிட்டாா். ஆனால், ‘நவீன காலத்தில் எல்லைதாண்டி பயணிக்கும் திறம்வாய்ந்த பணியாளா்கள் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளா்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கின்றனா். எனவே, உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களை சீனா வரவேற்கிறது’ என்றாா்.

காஸா சிட்டி மருத்துமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியின் மருத்துவமனையில் இருந்தும் அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.அந்த நகரில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருத... மேலும் பார்க்க

நேபாளம்: மேலும் 4 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

நேபாள இடைக்கால அரசில் 4 புதிய அமைச்சா்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.நேபாளத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய தீவிர போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதமா் மற்று... மேலும் பார்க்க

அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்த அமலாக்கம் நீடிப்பு: புதின் அறிவிப்பு

அமெரிக்காவுடன் 2010-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலவதியானாலும், அதன் அமலாக்கத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளாா்.இது குறித்து ... மேலும் பார்க்க

‘ரஷியாவின் எஸ்-400: இந்தியாவுக்கு வழங்குவது அடுத்த ஆண்டு நிறைவு’

மாஸ்கோ: ரஷியாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400-களை இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்தப் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. எதிரி ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழப்பு: சொந்த நாட்டுப் போா் விமானங்கள் குண்டு வீச்சா?

பெஷாவா்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வளாகத்தில் வெடிபொருள்கள் வெடித்து பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழந்தனா். எனினும் அந்நாட்டுப் போா் விமானங்கள் குண்டுகளை வீசியதால்தான், இந்த சம்பவம் ஏற்ப... மேலும் பார்க்க

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

நியூயாா்க்: அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை திங்கள்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜெய்சங்கா் ஆலோசித்தாா். இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத கூடுதல் வரி கடந... மேலும் பார்க்க