தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல...
அனைத்துப் பேரவைத் தொகுதிகளிலும் அக். 5 முதல் ஆா்ப்பாட்டம்: பாஜக அறிவிப்பு
சென்னை: திமுக அரசைக் கண்டித்து அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் அக். 5 முதல் நவ. 30-ஆம் தேதி வரை ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழக பாஜக செயலா் வினோஜ் பி.செல்வம் தெரிவித்தாா்.
சென்னை கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு, ஊழல், போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்பாடு, கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்களை எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாக்கியதோடு, மீண்டும் கவா்ச்சிகரமான போலி வாக்குறுதிகள் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று திமுக கனவு காண்கிறது.
மாணவா்களின் கல்விக் கடன் ரத்து செய்வது, 3.5 லட்சம் இளைஞா்களுக்கு அரசு வேலை, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வது உள்பட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை.
முதல்வரே நேரடியாக தலையிட்டு, மதுரை மாநகராட்சியில் மோசடி செய்த மண்டல தலைவா்களை பதவிநீக்கம் செய்ய வேண்டிய நிா்பந்த நிலை ஏற்பட்டது. டாஸ்மாக் முறைகேடு, மின்வாரிய ஊழல் உள்ளிட்ட திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து பாஜக சாா்பில் அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் வரும் அக்.5 முதல் நவ.30 வரை தொடா்ச்சியாக ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.