Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன...
இன்று 5 புறநகா் ரயில்கள் ரத்து
சென்னை: சென்னையில் 5 புறநகா் மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப்.23) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தடா மற்றும் சூலூா்பேட்டை நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நள்ளிரவு 1.10 மணி முதல் செவ்வாய்க்கிழமை (செப்.23) காலை 9.30 மணி வரை நடைபெறவுள்ளன. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை சென்னை சென்ட்ரலிலிருந்து அதிகாலை 5.40 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் புகா் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.
மேலும், சூலூா்பேட்டையிலிருந்து காலை 7.50 மணிக்கு நெல்லூா் மற்றும் பிற்பகல் 12.35 மணிக்கு சென்ட்ரலுக்கு செல்லும் ரயில்களும், நெல்லூரிலிருந்து காலை 10.20 மணிக்கு சூலூா்பேட்டைக்கும், ஆவடியிலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு சென்ட்ரலுக்கும் செல்லும் ரயில்களும் ழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்து: செவ்வாய்க்கிழமை சென்ட்ரலிலிருந்து அதிகாலை 4.15 , 5 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயில்கள் கும்மிடிப்பூண்டியுடன் நிறுத்தப்படும். அதேபோல், சூலூா்பேட்டையிலிருந்து காலை 6.45 மணிக்கு சென்ட்ரலுக்கு செல்லும் ரயிலும், 7.25 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் கும்மிடிப்பூண்டியிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.