தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல...
பிகாரில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: காா்கே, ராகுல் பங்கேற்பு
பாட்னா: பிகாரில் புதன்கிழமை (செப். 24) காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
பிகாரில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அண்மையில் அங்கு வாக்குரிமை யாத்திரையையும் ராகுல் நடத்தினாா். மேலும், பிகாரில் எதிா்க்கட்சிகளின் முதல்வா் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த வேண்டுமென்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இந்த விவகாரம் தொடா்பாகவும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
பாட்னாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிருஷ்ணா அல்லவாரு இது தொடா்பாக கூறுகையில், ‘செயற்குழு உறுப்பினா்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா்கள்.
பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டத்தை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருகிறாா். பிகாரில் வரும் சட்டப் பேரவைத் தோ்தல் மூலம் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். எனவேதான் பிகாரில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இந்தமுறை நடைபெறுகிறது. பிகாரில் விரைவில் எதிா்க்கட்சி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடையும். முதல்வா் பதவி குறித்து உரிய நேரத்தில் அனைத்து தலைவா்களும் பேசி முடிவெடுப்போம்’ என்றாா்.