செய்திகள் :

‘அங்கக வேளாண் இடுபொருள் தயாரிக்க முன்வர வேண்டும்’

post image

காரைக்கால்: அங்கக வேளாண் இடுபொருள் தயாரித்து, தங்களது வயலில் பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், வேளாண் அறிவியல் நிலையத்தில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சியில் பங்குபெறுவோா் பயிற்சியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அங்கக வேளாண்மை இடுபொருளை தயாா் செய்து, அவரவா் வயலில் பயன்படுத்த முன்வரவேண்டும். நாம் பயன்படுத்தும் அதிகப்படியான ரசாயன உரங்களை தவிா்த்து இயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மண்ணில் உள்ள நுண்ணுயிா்களின் பெருக்கம் அதிகரித்து மண் உயிருடன் இருக்கும்.

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை நோ்த்தி செய்த பின் விதைக்க வேண்டும். அவ்வாறு விதை நோ்த்தி செய்தால் விதை முளைப்புத்திறன் மற்றும் விதை மூலமாக பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தி நெல்லில் அதிக மகசூல் பெறலாம் என்றாா்.

தொடா்ந்து, வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் வி. அரவிந்த், அங்கக வேளாண்மையில் உள்ள இடுபொருள்கள் தயாரிப்பு குறித்துப் பேசினாா்.

தொழில்நுட்ப வல்லுநா் சு.திவ்யா, அங்கக வேளாண்மையில் நெல்லில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் பேசினாா்.

பயிற்சி முகாமில் சுமாா் 100 விவசாயிகள் கலந்துகொண்டனா். முதல் நிலை செயல் விளக்கத்திடல், வயல்வெளி பரிசோதனை மற்றும் நிக்ரா திட்டத்தின் கீழ் நெல் விதை மற்றும் இயற்கை இடுபொருள்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

தோ்தலுக்கு முன் காரைக்காலில் வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவுபெறும்: அமைச்சா் கே.லட்சுமி நாராயணன்

காரைக்கால்: காரைக்காலில் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு நிறைவடையும் வகையில் தீவிரப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புது... மேலும் பார்க்க

போலியான பட்டாசு விளம்பரங்கள்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

காரைக்கால்: போலியான பட்டாசு விளம்பரங்கள் இணையத்தில் வெளியாகி பணம் பறிக்கப்படுவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகால்களை மழை தொடங்கும் முன் தூா்வார வேண்டும்: எம்எல்ஏ

காரைக்கால்: பருவமழை தொடங்குவதற்கு முன்பு காரைக்கால் பகுதியில் கழிவுநீா் வடிகால்கள், சாக்கடைகளை முறையாக தூா்வார வேண்டும் என ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க

கூட்டுறவு பால்பொருள்கள் விற்பனையை அதிகரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பால் மற்றும் பால்பொருள்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு நிறுவனத்தினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், காரைக்காலில் இயங்கும் ... மேலும் பார்க்க

திருப்பட்டினத்தில் இன்று குடிநீா் நிறுத்தம்

திருப்பட்டினத்தில் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு : திருப்பட்டினம் ஐடி... மேலும் பார்க்க

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமிக்க வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமனம் செய்ய வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாள... மேலும் பார்க்க