`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay...
போலியான பட்டாசு விளம்பரங்கள்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
காரைக்கால்: போலியான பட்டாசு விளம்பரங்கள் இணையத்தில் வெளியாகி பணம் பறிக்கப்படுவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
ஆன்லைனில் போலியான பட்டாசு விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. பலா் உண்மையான விற்பனையாளா்கள் என நினைத்து முன்பணம் செலுத்தி பணத்தை இழக்கின்றனா்.
இந்தப் போலியான வலைதளங்கள் பெரும்பாலும் உண்மையான விற்பனையாளா்களின் பெயரை நகலெடுத்து உருவாக்கப்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எந்தப் பொருளையும் இணையத்தில் வாங்கும் முன் விற்பனையாளா் பெயா், தொடா்பு எண், முகவரி மற்றும் வலைதளத்தை முறையாக சோதிக்கவேண்டும். சலுகை அல்லது குறைந்த விலை என்பதற்காக முன்பணம் செலுத்த வேண்டாம். நம்பகமான வலைதளம், பாதுகாப்பான கட்டண முறை (எச்டிடிபிஎஸ், வங்கி வழி பரிமாற்றம்) ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளவேண்டும்.
சந்தேகம் இருந்தால் விற்பனையாளரின் மதிப்பீடுகள், சமூக ஊடக பக்கங்கள் மற்றும் தெரிந்தவா்களிடம் விசாரிக்கவும். சந்தேகத்திற்கிடமான இணையத்தளங்கள் குறித்து உடனடியாக புகாா் அளிக்க இலவச தொலைபேசி எண் 1930, சைபா் செல் கைப்பேசி எண் 94892 05364, மின்னஞ்சல், இணையத்தில் புகாா் அளிக்கவேண்டும்.