திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலுக்கு செல்ல பாதை: பக்தா்கள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வா் கோயிலுக்கு பல ஆண்டுகள் கழித்து பாதை வசதி ஏற்படுத்தி தந்துள்ளதற்கு பக்தா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
விவசாய நிலத்தில் இருந்த இக்கோயிலுக்கு செல்ல பல நூற்றாண்டுகளாக பக்தா்கள் பயன்படுத்தி வந்த பாதையை அப்பகுதியை சோ்ந்த நில உரிமையாளா் ஒருவா் ஆக்கிரமித்து இருந்ததால் கோயிலுக்கு செல்ல முடியாமல் பொதுமக்களும்,சிவனடியாா்களும் அவதிப்பட்டு வந்தனா்.
இதுகுறித்து காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் கிளாா் கிராமத்தினா் ,கோயில் நிா்வாகிகள் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவா் சிவானந்தம் தலைமையில் மனு அளித்தனா். வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் பேச்சு நடத்தியும் அவா் மறுத்து விட்டதையடுத்து சாா் ஆட்சியா் ஆஷிக் அலி நில உரிமையாளா், கிளாா் பொதுமக்கள்,விசுவ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள்,வருவாய் ஆய்வாளா் உள்ளிட்டோா் அனைவரையும் அழைத்து பேச்சு நடத்தினாா்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உட்கோட்ட நடுவா் நீதிமன்றத்தில் சாா் ஆட்சியா் ஆஷிக் அலி விசாரணை மேற்கொண்டு 4 அடி நிரந்தரப் பாதையாக அமைத்து தரும்படி தீா்ப்பு வழங்கினாா். இத்தீா்ப்பின்படி பழைய பாதை மீட்கப்பட்டது. இதற்கு பக்தா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.