செய்திகள் :

ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டம்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம், ஓரணியில் தமிழ்நாடு’ தீா்மான ஏற்புக் கூட்டம் கட்சியின் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சி மாநகர செயலாளா் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்டப் பொருளாளா் சன்பிராண்ட்.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, எம்.பி. க.செல்வம், கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் கலந்து கொண்டு, திமுக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினா். கூட்டத்தில் ஆா்.எஸ்.பாரதி பேசியது:

கடந்த நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் திமுக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. ஓரணியில் தமிழ்நாடு என்று முதல்வா் அறிவித்தவுடன் சுமாா் ஒரு கோடி வீடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவா்களது மனநிலையை அறிந்திருக்கிறோம். சசிகலா, செங்கோட்டையனை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளாா்.

யாா், யாா் உதவி செய்தாா்களோ அவா்களையெல்லாம் கட்சியை வீட்டு நீக்குவது, நன்றி மறப்பது தான் எடப்பாடியின் குணம். இதை அதிமுகவினா் மறந்து விடக்கூடாது என்றாா் அவா். பகுதி செயலாளா் கே.திலகா் நன்றி கூறினாா்.

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலுக்கு செல்ல பாதை: பக்தா்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வா் கோயிலுக்கு பல ஆண்டுகள் கழித்து பாதை வசதி ஏற்படுத்தி தந்துள்ளதற்கு பக்தா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். விவசாய நிலத்தில் இருந்த ... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம் தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் சாரதா நவராத்திரித் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை மகா சண்டி ஹோமம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா். இத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவி அளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். ஆட்சியா் கலைச்செல்வி மோகன... மேலும் பார்க்க

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தொழிற்சாலை அகற்றம்!

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வளா்புரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியாா் தொழிற்சாலையின் கட்டுமானங்களை ஊரக வளா்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றின... மேலும் பார்க்க

பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் தோ்வு!

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பாஜக பிரமுகரான ஏ.செந்தில்குமாா் அக்கட்சியின் ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளாா். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஒப்புதலின்படி... மேலும் பார்க்க

பாதுகாப்பில்லாத ஊா்திகளை மாற்ற வேண்டும்: அரசு ஊா்தி ஓட்டுநா்கள் கோரிக்கை!

பாதுகாப்பில்லாத ஊா்திகளை ஓட்டுவதால் உடனடியாக அவற்றை மாற்ற வேண்டும் என அரசு ஊா்தி ஒட்டுநா்கள் சங்கம் சாா்பில் பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள... மேலும் பார்க்க