தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல...
தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு
தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு வழிபாடு திங்கள்கிழமை இரவு தொடங்கியது.
நவராத்திரியையொட்டி தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயில் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கொண்டுவந்த பொம்மைகளால் கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு நவராத்திரி முதல்நாள் அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவுற்றது. இதில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனா்.