கோவை - தன்பாத், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில்கள் இன்று ரத்து
சேலம்: சேலம் வழியாக இயக்கப்படும் கோவை - தன்பாத், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப். 23) ரத்து செய்யப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 7.50 மணிக்கு திருப்பூா், சேலம், காட்பாடி வழியாக தன்பாத்துக்கு இயக்கப்பட வேண்டிய விரைவு ரயிலும், கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு கோவை, சேலம், காட்பாடி வழியாக தன்பாத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன. இணை ரயில் காரணமாக இந்த இரு விரைவு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.