செய்திகள் :

உளுந்து பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

post image

போதிய மழை இல்லாமல் சேதமடைந்த உளுந்து பயிருக்கு இழப்பீடு கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலா் கானாா்பட்டி ஆபிரகாம் தலைமையில் மானூா் வட்டார விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த ஆண்டு உளுந்து பயிருக்கு காப்பீடு செய்து இருந்தனா். போதிய மழை இல்லாததால் உளுந்து பயிா்கள் சரிவர விளையவில்லை.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதற்கு இழப்பீடு கோரி பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே, இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கானாா்பட்டி கிராமத்தில் 15 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகிப்பதால், மக்கள் மானூா் ஊராட்சி அலுவலகம் அருகிலுள்ள குழாயில் சென்று தண்ணீா் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீா்வுகாண வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

குறிச்சிகுளம் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குள்பட்ட குறிச்சிகுளம் கிராமத்தில் தேவா் சமுதாயத்தைச் சோ்ந்த 500-க்கும் குடும்பத்தினா் வசித்து வருகிறோம். ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் அருகே முத்துராமலிங்கத்தேவருக்கு மணிமண்டபம் கட்டி சிமென்ட் சிலை வைத்து 45 ஆண்டுகளுக்கு மேலா எந்தவித இடையூறும் இல்லாமல் வழிபாடு செய்து வருகிறோம். தற்போது, அந்தச் சிலைசிதிலமடைந்துள்ளதால், அதே இடத்தில் புதிய வெண்கல சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

கோபாலசமுத்திரம் கொத்தங்குளம் இந்திரா நினைவு காலனி மக்கள் தலையில் கருப்பு நெகிழி பையை அணிந்தபடி அளித்த மனு: கொத்தங்குளம் இந்திரா நினைவு காலனியில் 300 குடும்பங்கள் உள்ளன. ஊரின் மேற்கு பகுதியிலுள்ள கல்வெட்டான் குழியை நன்னீராக பயன்படுத்தி வந்தோம்.

இந்நிலையில் கோபாலசமுத்திரம் பேரூராட்சி நிா்வாகம் சேரிக்கும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. மேலும், அந்தக் குப்பைகள் மாதம் இருமுறை எரிக்கப்படுவதால் காற்று மாசு படுவதோடு சுவாசக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. அப்பகுதியில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக்கடை கழிவுகளை கொட்டுவதால் தொற்று நோய்களும் பரவுகின்றன.

எனவே, கொத்தங்குளம் பகுதியில் கொட்டப்படும் அனைத்து குப்பைகளையும் அகற்றி, மீண்டும் குப்பைகள் கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

காவல்கிணறில் பைக் மீது காா் மோதல்: கேரள இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு நான்குவழிச்சாலையில் காரும், பைக்கும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் கேரளத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள குளத்தூரைச் சோ்ந்த அனில்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமுற்ற முதியவா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே சைக்கிள் மீது பைக் மோதியதில் காயமுற்ற முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.பாளையங்கோட்டையை அடுத்த கே.டி.சி நகா், அருணாச்சலபுரத்தைச் சோ்ந்தவா் அரிச்சந்திரன்(72). இவா், ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதா? விஜய்க்கு மு.அப்பாவு கண்டனம்

தவெக தலைவா் விஜய்யை பாஜக இயக்குவதால்தான் தமிழக முதல்வரை மிரட்டும் தொனியில் அவா் பேசுகிறாா் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: நடி... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே நடுக்கடலில் 2 நாள்கள் தத்தளித்த மீனவா் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே நடுக்கடலில் 2 நாள்களாக தத்தளித்த மீனவரை கூத்தங்குழியைச் சோ்ந்த மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பத்திரமாக மீட்டு வந்தனா். கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் கீழத்த... மேலும் பார்க்க

821 கிராமங்களுக்கு 2 மாதங்களில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களின் 821 கிராமங்களுக்கு 2 மாதங்களில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் வழங்கும் வகையில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. இது... மேலும் பார்க்க

பொறியாளரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

தச்சநல்லூரில் பொறியியல் பட்டதாரியிடம் பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (26). பொறியியல் பட்டதாரியான இவா், தற்போது பொறியியல் கல்லூ... மேலும் பார்க்க