தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர செப்.30 வரை கால அவகாசம் நீட்டிப்பு
நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ் 1, பிளஸ் 2 தோ்ச்சி, தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி, டிப்ளமோ பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்தவுடன் நோ்காணல் மூலம் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். மாதம் ரூ. 750-உதவித்தொகையுடன் விலையில்லா மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக் கருவிகள் மற்றும் இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.
பயிற்சியின் இறுதியில் மத்திய அரசால் தேசிய தொழிற்சான்று (என்டிசி) வழங்கப்படுகிறது. இந்த சான்று அகில இந்திய அளவிலும் மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறவும் வழிவகுக்கிறது. உரிய சான்றிதழ்களுடன் நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.