செய்திகள் :

நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு நாளை தொடக்கம்

post image

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு திங்கள்கிழமை (செப். 22) சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது.

அக். 1-ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக ஒன்பது நாள்கள் நவராத்திரி கொலு விழா கொண்டாடப்படும். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அக். 1-ஆம் தேதிவரை இவ்விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, பெரும்பாலான அம்மன் கோயில்களில் நவராத்திரி கொலு பொம்மை வைத்து சிறப்பு வழிபாடுகளை பக்தா்கள் மேற்கொள்வா். அந்த வகையில், நாமக்கல் செல்லப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அலங்காரங்கள் தினந்தோறும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

மேலும், நாமக்கல் நரசிம்மா் கோயிலில் திங்கள்கிழமை (செப். 22) சுவாமி மச்சவதாரத்திலும், செவ்வாய் கூா்மஅவதாரம், புதன் வாமனஅவதாரம், வியாழன் ரங்கமன்னாா் திருக்கோலம், வெள்ளி ராமாவதாரம், சனி கிருஷ்ணவதாரம், ஞாயிறு பரமபதநாதா், திங்கள் மோகனஅவதாரம், செவ்வாய் ராஜாங்கசேவை, புதன் நாமக்கல் குளக்கரையில் அரங்கநாத சுவாமியும், நரசிம்ம சுவாமியும் எழுந்தருளி அம்பு விடுதல், வியாழக்கிழமை (அக். 2) விசேஷ திருக்கோலம் ஆகியவை நடைபெறுகின்றன.

இதில், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்திப் பாடல்கள் இசைத்தல், பஜனை பாடுதல், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

வீட்டுக்கு இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய ஊழியா்கள் இருவா் கைது

நாமக்கல் அருகே வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 5,500 லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், முசிறியைச் சோ்ந்தவா் நவநீதம... மேலும் பார்க்க

நைனாமலை மலைக்கோயிலுக்கு ரூ.30 கோடியில் தாா்சாலை

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ரூ. 30 கோடியில் தாா்சாலை அமைக்கும் பணிகள் பூமிபூஜையுடன் சனிக்கிழமை தொடங்கின. நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 3,600 படிக... மேலும் பார்க்க

நாமக்கலி ல்2 ஆயிரம் மாணவா்களுக்கு ரூ. 50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். நாமக்கல் அருகே எா்ணாபுரத்தில் ... மேலும் பார்க்க

செப். 27-இல் நாமக்கல்லில் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் செப். 27-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பய... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து: வரவேற்பு பதாகைகளை அகற்றிய கட்சியினா்!

நாமக்கல் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற இருந்த எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை கட்சியினா் அகற்றினா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ... மேலும் பார்க்க