செய்திகள் :

ஹிந்தியில் ரீமேக்காகும் செல்லம்மா தொடர்!

post image

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா தொடர் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.

நடிகை அன்ஷிதா நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், ஹிந்தியிலும் ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் 2022 மே முதல் 2024 செப்டம்பர் வரை செல்லம்மா தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் பிக் பாஸ் பிரபலம் அன்ஷிதா நாயகியாக நடித்திருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே தொடரில் அவர் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகர் அர்ணவ் (இவரும் பிக் பாஸ் பிரபலமே) நடித்திருந்தார்.

கணவரை இழந்து பெண் குழந்தையுடன் இருக்கும் பெண்ணின் கதையாக செல்லம்மா தொடர் ஒளிபரப்பானது. பின்னர் அவரின் வாழ்க்கையில் மீண்டுமொரு காதல் தோன்றி, அது சந்திக்கும் சவால்களே தொடரின் மையக்கருவாக உள்ளது.

உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் நடிகர்களின் நடிப்பும் சேர்ந்ததால், இந்தத் தொடர் தமிழில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கேரளாவைச் சேர்ந்த அன்ஷிதாவுக்கு தமிழில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

இதையும் படிக்க |இராமாயணம் தொடர் நிறைவடைகிறது! புதிய ஆன்மிக தொடர் அறிவிப்பு!

Chellamma serial also being remade in Hindi

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன் லால்!

சினிமாவுக்கு செய்த பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை மலையாள நடிகர் மோகன்லால் இன்று (செப். 23) பெற்றுக்கொண்டார். தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் த... மேலும் பார்க்க

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் ஷாருக்கான்!

ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் நடிகர் ஷாருக்கான். தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் விருதை பெற்றுக்கொண்டார். 71 வத... மேலும் பார்க்க

தேசிய விருது பெற்றார் ஊர்வசி!

'உள்ளொழுக்கு'மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை நடிகை ஊர்வசி பெற்றுக்கொண்டார். 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் இன்ற... மேலும் பார்க்க

தேசிய விருது பெற்றார் எம்.எஸ். பாஸ்கர்!

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான “பார்க்கிங்” திரைப்படத்திற்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் வென்றுள்ளார். 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும... மேலும் பார்க்க

பாரம்பரிய உடையில் தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார்!

வாத்தி படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார். தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் விருதை பெற்றுக்கொண்டார். வாத்தி படத்தில்... மேலும் பார்க்க

தேசிய விருது பெற்ற பார்க்கிங் பட இயக்குநர், தயாரிப்பாளர்!

சிறந்த படத்திற்கான தேசிய விருது பார்க்கிங் படத்திற்கு வழங்கப்பட்டது. படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் விருதை பெற்றுக்கொண்டார். 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் உள்ள வ... மேலும் பார்க்க