முதல்முறையாக தங்கப் பந்து விருது வென்ற டெம்பேலே! நூலிழையில் தவறவிட்ட யமால்!
பிஎஸ்ஜியின் கால்பந்துவீரர் உஸ்மானே டெம்பேலே முதல்முறையாக பேலந்தோர் (தங்கப் பந்து) விருது வென்று அசத்தியுள்ளார்.
பிஎஸ்ஜி அணிக்காக முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உஸ்மானே டெம்பேலே (28 வயது) பிஎஸ்ஜி அணிக்காக 2023 முதல் விளையாடி வருகிறார்.
இதற்கு முன்பாக பார்சிலோனா அணியில் இருந்த இவர் காயம் காரணமாக வெளியேறினார்.
கால்பந்து உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாக பேலந்தோர் (தங்கப் பந்து) விருது கருதப்படுகிறது.
இந்த விருதை டெம்பேலே முதல்முறையாக வென்று அசத்தியுள்ளார்.
பேலந்தோர் தரவரிசை
1. உஸ்மானே டெம்பேலே (பிஎஸ்ஜி)
2. லாமின் யமால் (பார்சிலோனா)
3. விடிங்கா (பிஎஸ்ஜி)
4. முகமது சாலா (லிவர்பூல்)
5. ரபீனியா (பார்சிலோனா)