தாயாகிறார் கத்ரீனா கைஃப்..! கணவருடன் இருக்கும் படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி!
வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!
வாட்ஸ்ஆப் குழுவில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பதிவிடப்படும் தகவல்களை தவறவிடுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய சோதனையில் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது.
இதன்படி, அனைவரையும் குறிப்பிட்டுப் பதிவிடப்படும் வாட்ஸ்ஆப் குழு செய்திகளின் நோடிபிகேஷன்களை தவிர்க்கும் வகையிலான புதிய அம்சமும் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
நோடிபிகேஷன்கள் அதிகமாகாமல் கட்டுப்படுத்திக்கொள்ளவும், அதிக எண்ணிக்கையிலானோர் உள்ள குழுக்களில் அடிக்கடி வரும் நோடிபிகேஷன்களால் கவனச் சிதறல்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் இந்த அம்சங்களை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்கிறது.
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் செயலியை உலகம் முழுவதும் பல்வேறு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், குழுவாகவும் பல்வேறு நபர்கள் இணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.
எனினும் அதிக எண்ணிக்கையிலானோர் உள்ள குழுக்களில் அனைவரையும் (@everyone) குறிப்பிட்டு தகவல்களைப் பகிர்ந்துகொள்வதால் அடிக்கடி நோடிபிகேஷன்கள் வருவது வாடிக்கையாகிவிட்டது.
குழுவில் உள்ள யாராகினும் அனைவரையும் எனக் குறிப்பிட்டு தகவல்களைப் பகிர்ந்தால் ஒவ்வொரு முறையும் நோடிபிகேஷனாக வரும்.
பெரும்பாலும் முக்கியமான தகவல்களுக்கு மட்டுமே அனைவரையும் எனக் குறிப்பிட்டு குழுக்களில் செய்திகள் பகிரப்பட்டாலும், சில நேரங்களில் இது தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழுக்களின் நோக்கமும் சீர்கெடுகிறது.
அதோடு அடிக்கடி வரும் நோடிபிகேஷன்களால் அதிக கவனச் சிதறல் ஏற்படுவதால், வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதில் பயனர்களுக்கு சலிப்புத்தன்மையும் ஏற்பட்டுவிடுகிறது.
இதனைத் தவிர்க்கும் வகையில், வாட்ஸ்ஆப் குழுவில், அனைவரையும் எனக் குறிப்பிட்டு பகிரப்படும் தகவல்களுக்கான நோடிபிகேஷன்களில் கட்டுப்பாடுகளை விதித்து, நோடிபிகேஷன் வராத வகையில் செய்துகொள்ளலாம். சிலர் பதிவிடும் தகவல்களுக்கு மட்டும் நோடிபிகேஷன் வரும் வகையில் தேர்வு செய்துகொள்ளலாம்.

இதனைத் தேர்வு செய்துகொள்ள செட்டிங் தேர்வு செய்து அதில் மியூட், மியூட் எவ்ரிஒன் என எது வேண்டுமோ அதனைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
எதற்கு நோடிபிகேஷன்கள் வர வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு தேர்வு செய்துகொள்ளலாம். இதன்மூலம் முக்கியமான நபர்களை மட்டும் குழுவில் தேர்வு செய்துகொண்டு, அதன் நோடிபிகேஷன்களுக்கு மட்டும் பதிலளிக்கலாம். வரும் வாரங்களில் நடக்கும் அப்டேட்களில் இந்த மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிக்க |விப்ரோ நிறுவனரிடம் உதவிக் கோரும் கர்நாடக முதல்வர்!