தாயாகிறார் கத்ரீனா கைஃப்..! கணவருடன் இருக்கும் படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி!
நீச்சல் உடையில் சாய் பல்லவி! வைரலான புகைப்படங்கள்! வாழ்த்தும் வசவும்!
நடிகை சாய் பல்லவி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை அவரது சகோதரி வெளியிட்டிருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் பதிவுக்கு வாழ்த்து தெரிவித்தும் விமர்சித்தும் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி, தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மாரி - 2 திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து என்ஜிகே, கார்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
கடைசியாக தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் திரைப்படத்தில் நடித்த சாய் பல்லவி, அவரது சிறந்த நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றார்.
தற்போது பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணா திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரேமம் முதல் அமரன் வரை சாய் பல்லவி நடித்துள்ள அனைத்து படங்களிலும் கவர்ச்சியில்லாத கண்ணியமான உடையிலேயே தோன்றியுள்ளார். இதுவரை கவர்ச்சியான காட்சிகளில் அவர் நடிக்காததால், ரசிகர்கள் மனதில் அவருக்கென்று தனியிடம் இருக்கின்றது.
மேலும், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்று சமூக வலைதளப் பக்கங்களிலும் அடிக்கடி புகைப்படங்களையும் சாய் பல்லவி வெளியிடமாட்டார்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்னதாக, சாய் பல்லவி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை அவரது சகோதரி பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவைத் தொடர்ந்து, எப்போதும் பாரம்பரிய உடையில் தோன்றும் சாய் பல்லவி, நீச்சல் உடை அணிந்தது ஏன்? என்று அவரை விமர்சித்து சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் சிலர், திரைகளில் மட்டும்தான் பாரம்பரிய உடையா? நிஜ வாழ்வில் கிடையாதா? என்றும் நீங்களும் சாதாரண நடிகை என்று நிரூபித்துவிட்டீர்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சாய் பல்லவிக்கு ஆதரவு தெரிவித்து, ஆடை சுதந்திரம் அவரது உரிமை, கடற்கரையில் சேலை கட்ட வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா? என்று கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் வெளியான சித்திரை செவ்வானம் என்ற திரைப்படத்தில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.