செய்திகள் :

ஹாட்ரிக் தங்கப் பந்து விருது வென்ற பொன்மட்டி..! முதல் வீராங்கனையாக சாதனை!

post image

மகளிருக்கான தங்கப் பந்து விருதை பார்சிலோனாவின் கால்பந்து வீராங்கனை அய்டானா பொன்மட்டி வென்றுள்ளார்.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்த விருதினை வென்ற முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையை பொன்மட்டி படைத்துள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த அய்டானா பொன்மட்டி (27 வயது) பார்சிலோன அணியில் விளையாடி வருகிறார்.

பார்சிலோனா உள்ளூரில் மூன்று சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய இவர் இந்தாண்டுக்கான தங்கப் பந்து விருதை வென்றுள்ளார்.

ஏற்கெனவே, இவர் கடந்த 2023, 2024-ஆம் ஆண்டுகளில் வென்று அசத்தியுள்ளார்.

மகளிருக்கான யூரோ சாம்பியன்ஷிப்பில் ஸ்பெயினை முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்று அசத்தினார்.

மகளிருக்கான சாம்பியன்ஸ் லீக்கிலும் இவரது அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பேலந்தோர் தரவரிசை

1. அய்டானா பொன்மட்டி (பார்சிலோனா)
2. மரியோனா கால்டெண்டே (ஆர்செனல்)
3. அலெஸ்ஸியா ரூஸ்ஸோ (ஆர்செனல்)
4. அலெக்ஸியா புடெல்லாஸ் (பார்சிலோனா)
5. சோலே கெல்லி (ஆர்செனல்)

Aitana Bonmati was awarded the 2025 Women's Ballon d'Or at the Theatre du Chatelet in Paris, while Arsenal was named the Women's Club of the Year.

பாரம்பரிய உடையில் தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார்!

வாத்தி படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார். தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் விருதை பெற்றுக்கொண்டார். வாத்தி படத்தில்... மேலும் பார்க்க

தேசிய விருது பெற்ற பார்க்கிங் பட இயக்குநர், தயாரிப்பாளர்!

சிறந்த படத்திற்கான தேசிய விருது பார்க்கிங் படத்திற்கு வழங்கப்பட்டது. படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் விருதை பெற்றுக்கொண்டார். 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் உள்ள வ... மேலும் பார்க்க

ஹிந்தியில் ரீமேக்காகும் செல்லம்மா தொடர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா தொடர் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. நடிகை அன்ஷிதா நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், ஹிந்தியிலும் ஒளிபரப்பாக... மேலும் பார்க்க

நீச்சல் உடையில் சாய் பல்லவி! வைரலான புகைப்படங்கள்! வாழ்த்தும் வசவும்!

நடிகை சாய் பல்லவி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை அவரது சகோதரி வெளியிட்டிருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகின்றது.சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் பதிவுக்கு வாழ்த்து தெரிவித்தும் விம... மேலும் பார்க்க

முதல்முறையாக தங்கப் பந்து விருது வென்ற டெம்பேலே! நூலிழையில் தவறவிட்ட யமால்!

பிஎஸ்ஜியின் கால்பந்துவீரர் உஸ்மானே டெம்பேலே முதல்முறையாக பேலந்தோர் (தங்கப் பந்து) விருது வென்று அசத்தியுள்ளார். பிஎஸ்ஜி அணிக்காக முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல இவரது பங்கு முக்கியமானதாக இருந்தத... மேலும் பார்க்க

நடிகர் சாந்தனுவுக்கு சிறந்த நடிகருக்கான விருது!

நடிகர் சாந்தனுவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ், லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்... மேலும் பார்க்க