செய்திகள் :

உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்! 2 பேர் பலி!

post image

உக்ரைன் மீது ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா தலைநகர் மாஸ்கோவின் மீது உக்ரைன், நேற்று (செப். 22) நள்ளிரவு ட்ரோன்கள் மூலம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. அதேவேளையில், உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைனின் தெற்கு ஜபோரிஜியா மாகாணம் மற்றும் கடற்கரை நகரமான ஒடேசா பகுதியின் மீதும் ரஷியா, சுமார் 3 ஏவுகணைகள் மற்றும் 115 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஏராளமான ட்ரோன்கள் தகர்க்கப்பட்டதாகவும், சர்வதேச நாடுகள் தங்களுக்கு அதிகப்படியான வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கவேண்டுமெனவும், உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ வலியுறுத்தியுள்ளார்.

நியூயார்க் நகரத்துக்குச் சென்றுள்ள உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காஸாவுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!

Two people have reportedly been killed in Russian airstrikes on Ukraine.

ஹமாஸ் கடற்படையின் துணைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் அமைப்பின் கடற்படை துணைத் தளபதியைக் கொன்றுவிட்டதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் ... மேலும் பார்க்க

காஸாவுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!

காஸா மக்களுக்கு ஆதரவாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம் வெடித்துள்ளது. இத்தாலியின் பல்வேறு நகரங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் ... மேலும் பார்க்க

கனடாவில் காலிஸ்தான் தலைவர் கைது!

கனடாவில், பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கில் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் இந்தர்ஜீத் சிங் கோசல், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்ராறியோ மாகாணத்தில், பாதுகாப்பற்ற ம... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரான்ஸ்!

பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அரசு அங்கீகரித்துள்ளது.நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்துக்கு முன்னதான உச்சி மாநாட்டில... மேலும் பார்க்க

பாக். பிரதமர் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் டிரம்ப்!

பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சப... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

ஹெச்-1பி விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில... மேலும் பார்க்க