Congress support இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்க முடியாது - Data Head ...
காஸாவுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!
காஸா மக்களுக்கு ஆதரவாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம் வெடித்துள்ளது.
இத்தாலியின் பல்வேறு நகரங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று(திங்கள்கிழமை) நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது. தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65,000-யைக் கடந்துள்ளது. கடந்த வாரம் முதல் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றும் முயற்சியிலும் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இது ஒரு இனஅழிப்பு என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஸா மக்களின் பாதுகாப்புக்கு உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. மேலும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்து வருகின்றன.

இந்நிலையில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் அவருக்கு எதிராக இத்தாலி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஸா போரை நிறுத்துவது, பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதிக்குத் தடை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தாலியின் மிலனில் ஒரு ரயில் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினரும் நடவடிக்கை கொண்டனர்.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்திய காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுமார் 80 காவல்துறையினர் காயமடைந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பலரும் கோஷமிட்டு கையில் பதாகைகளுடன் பேரணியில் ஈடுபட்டனர்.
Disruption across Italy as tens of thousands protest against Gaza war
இதையும் படிக்க | கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?