"நாடகக்கலை என்பது நம்மை அழைத்துக்கொண்டே இருக்கும் பாசிட்டிவ் மோகினி" - 'மணல்மகுட...
Retirement: ஒரு தவறான முடிவு, ஓய்வுக் காலத்தையே மாற்றிவிடும்; நீங்க அதைச் செய்றீங்களா?
சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ஓர் இளைஞர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.
''சார், எனக்கு இப்போது 26 வயசு. சம்பளம் ரூ.40,000. ஓய்வுக்காலத் திட்டமிடல் பத்தி எல்லாரும் சொல்றாங்க. ஆனா இப்போதைக்கு கார் வாங்கணும், வீடு கட்டணும்... ஓய்வுக்காலம்னா இன்னும் 30 வருஷத்துக்கு மேல இருக்கு. அப்போ பாத்துக்கலாம்னு நினைக்கிறேன்'' என்றார்.
இன்னொருவரிடம் பேசியபோது அவர் சொன்னது...
''எனக்கு 45 வயசு. இப்போதான் ஓய்வுக்கால சேமிப்பு பத்தி யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன். 15 வருஷத்துல எவ்வளவு சேர்க்க முடியும்? ரிட்டைர்மென்டுக்கு ஒரு ₹20 லட்சம் போதுமா?'' என்று கவலையோடு கேட்டார்.
கடந்த மாதம் என்னிடம் அழாத குறையாகப் பேசிய ஒரு முதியவர்...
''30 வருஷம் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தேன். ஆனா ஓய்வுக்காலத்துக்கு ஒண்ணும் சேமிக்கவே இல்லை. இப்போ 65 வயசு. பிள்ளைகள் பார்த்துக்குவாங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்களுக்கே EMI, குழந்தைங்களோட படிப்பு செலவுன்னு கஷ்டம். இப்போ அடுத்தவங்க கையை நம்பியே வாழுறேன். இந்தக் கஷ்டம் யாருக்குமே வரக்கூடாது சார்!'' என்றார்.
ஓய்வுக்காலத் திட்டமிடல் என்பது வயதைப் பார்க்கும் விஷயம் அல்ல. அது உயிர்காக்கும் மருந்து மாதிரி கட்டாயம் செய்ய வேண்டிய விஷயம் என்பதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை.

25 வயதில் ஆரம்பிப்பவர் மாதம் ரூ.5,000 சேமித்தால், 60 வயதில் கிட்டத்தட்ட ரூ.2 கோடி கிடைக்கும். ஆனால், 45 வயதில் ஆரம்பிப்பவர் அதே தொகையைப் பெற மாதம் ரூ.25,000 சேமிக்க வேண்டும். இதுதான் கூட்டு வட்டியின் மாயாஜாலம்.

பணவீக்கம் ஆண்டுக்கு 6% என்று வைத்துக்கொண்டால், இன்று ரூ.50,000 செலவு செய்யும் நபருக்கு 30 வருடங்களுக்குப் பிறகு ரூ.2.87 லட்சம் தேவைப்படும். இதை உணர்ந்தவர்கள் சீக்கிரமே திட்டமிடுகிறார்கள். இல்லாதவர்கள் அந்த முதியவர் மாதிரி கடைசி நாட்களில் அழுகிறார்கள்.
மருத்துவச் செலவுகள் ஆண்டுதோறும் 10-15% உயர்ந்து வருகின்றன. இன்று ரூ.1 லட்சம் மருத்துவச் செலவு 20 வருடங்களில் ரூ.9.6 லட்சம் ஆகும். இதற்கெல்லாம் தயாராக இருப்பவர்கள் மட்டுமே அமைதியான ஓய்வுக்காலம் பெற முடிகிறது.
சம்பளத்தில் இருந்து 20% ஓய்வுக்காலத்துக்காக ஒதுக்குவது கட்டாய விதி. இளம் வயதில் இது கஷ்டமாகத் தோன்றலாம். ஆனால், அதுதான் பின்னாளில் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும். கட்டாயம் செய்யவேண்டிய விஷயத்தைத் தள்ளிப்போடுகிறவர்கள் அந்த முதியவர் போல் கடைசி காலத்தில் வருத்தப்படுகிறார்கள்...
உங்கள் ஓய்வுக்காலத்தைப் பாதுகாப்பாக்க விரும்புகிறீர்களா?
செப்டம்பர் 28, 2025, ஞாயிறு காலை 11 மணிக்கு (இந்திய நேரம்) நிதி நிபுணர் யாசீன் சஹர் அவர்கள் பேசும், 'அனைத்து வயதினருக்கான ஓய்வுக்காலத் திட்டமிடல்' சிறப்பு வெபினாரில் பங்கேற்க மறக்காதீர்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'இந்நிகழ்ச்சியை வழங்குகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 75 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். லாபம் வழங்கும் இந்த நேரலை நிகழ்ச்சியில் உங்கள் ஓய்வுக்கால கனவுகளை நிஜமாக்கும் ரகசியங்களை அறிந்துகொள்ளுங்கள். இந்த வாய்ப்பை இழக்க வேண்டாம்!
முன்பதிவு செய்ய: https://forms.gle/SZdtBc4aSfhk8JqTA