செய்திகள் :

தண்ணீரில் மிதக்கும் கொல்கத்தா; மழைக்கு 7 பேர் பலி; முடங்கிய போக்குவரத்து!

post image

கொல்கத்தாவில் நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை கனமழை பெய்தது. இம்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கனமழையால் நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மின்கசிவு உட்பட பல்வேறு காரணங்களால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் உள்ள பெனியாபுகூர், கலிகாபூர், நேதாஜி நகர், கரியாஹட், எக்பால்பூர், பெஹாலா மற்றும் ஹரிதேவ்பூர் ஆகிய இடங்களில் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன.

நகரில் அதிகமான இடங்களில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. அதோடு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தண்டவாளம், சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் போக்குவரத்தும் முடங்கியது. மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் சில மணி நேரத்தில் இந்த மழை கொட்டித்தீர்த்தது.

கரியா கம்தாஹரியில் 332 மி.மீ மழையும், ஜோத்பூர் பூங்காவில் 285 மி.மீ மழையும், காளிகாட்டில் 280 மி.மீ மழையும், டாப்சியாவில் 275 மி.மீ மழையும், பாலிகங்கேயில் 264 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. கனமழையால் துர்கா பூஜைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விமானங்களின் புறப்பாடு மற்றும் வரத்தும் தாமதமாகி இருக்கிறது. எனவே பயணிகள் விமானத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வரும்படி இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

கொல்கத்தா மேயரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிர்ஹாத் ஹக்கீம் மழை குறித்து கூறுகையில், ``எனது பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது. நகரில் இப்படி தண்ணீர் தேங்கியதை நான் பார்த்ததில்லை. இது போன்ற சூழ்நிலையை நான் இதுவரை பார்த்ததில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து வருகிறது. மேற்கொண்டு மழை பெய்யாவிட்டால் இன்று இரவுக்குள் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

Rain Alert: 28-ம் தேதி வரை `இந்த' மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; இன்று காலை 10 மணி வரை மழை நிலவரம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் மழை தொடரும் என்று கூறப்படுகிறது. மழைசென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பின் படி,இன்... மேலும் பார்க்க

Rain Alert: இந்த வாரம் முழுவதும் மழை; சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியில் எந்தெந்த நாள்களில் மழை?

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை இருக்கும். ... மேலும் பார்க்க

Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம்? சென்னையில் எப்போது வரை மழை?

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்துகொண்டு இருக்கிறது. தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி... மேலும் பார்க்க

Rain Alert: இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு! - வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது. சென்னை வானிலை மையத்தின் அறிக்கையின் படி, இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய... மேலும் பார்க்க

Rain Alert: தமிழ்நாட்டில் செப். 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் வருகிற செவ்வாய்கிழமை (செப் 23) வரை, மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையத்தின் அறிக்கையின் படி, இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும்... மேலும் பார்க்க

Rain Alert: தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்னும் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கிருஷ்ணகிரி, திருப்பத்த... மேலும் பார்க்க