செய்திகள் :

National Awards: ``இரண்டு பெண்களிடமிருந்து விருது பெற்றிருப்பது பெருமை!'' - விருது வென்ற பின் ஊர்வசி

post image

71-வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.

தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக் கான், ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட இயக்குநர் ராம் குமார் என விருது அறிவிக்கப்பட்ட அனைவரும் இந்த நிகழ்வில் பெரு மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு விருது பெற்றனர்.

விருது பெற்றப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து ஜி.வி. பிரகாஷும், நடிகை ஊர்வசியும் பேசியிருக்கிறார்கள்.

Shah Rukh Khan At 71st National Awards
Shah Rukh Khan At 71st National Awards

ஊர்வசி பேசும்போது, "ரொம்பவே சந்தோஷமான தருணமிது. இரண்டாவது முறையாக தேசிய விருது எனக்கு கிடைத்திருக்கு.

அப்போது எனக்கு விருது வழங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கும், இப்போது விருது வழங்கிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும் என் நன்றிகள்.

இரண்டு பெண்களிடமிருந்து விருது வாங்கியிருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். மோகன் லால் சாருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி." என்றார்.

ஜி.வி. பிரகாஷ், "71-வது தேசிய விருதுகளில் எனக்கும் விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

இது என்னுடைய இரண்டாவது நேஷனல் அவார்ட்.

கடந்த முறை, சிறந்த பின்னணி இசை பிரிவில் சூரரைப் போற்று' படத்திற்கு வாங்கியிருந்தேன்.

இந்த முறை சிறந்த பாடல்களுக்கான பிரிவில் வாத்தி' படத்திற்காக வாங்கியிருக்கேன்.

GV Prakash at 71st National Awards
GV Prakash at 71st National Awards

அந்தப் படத்தின் பாடல்கள் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் ஹிட்டாகியிருந்தது.

கமர்ஷியலாகவும் பெரிய அளவில் போய், விமர்சகர்களுக்கு அந்தப் பாடல்கள் பிடித்திருப்பது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும், `வாத்தி' படத்தின் தயாரிப்பாளருக்கும், தனுஷுக்கும் என் நன்றிகள்." எனப் பேசியிருக்கிறார்.

Parthiban: "முதலில் இதுபோன்ற செய்திகள் மரணமடைய வேண்டும்" - வதந்தி குறித்துக் கொதிக்கும் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் ஒரே ஆளை மட்டும் நடிக்க வைத்துப் படும் எடுப்பது, சிங்கிள் ஷாட்டில் எடுப்பது என வித்தியாசமாகத் திரைப்படங்களை எடுப்பவர் இரா. பார்த்திபன்.30 ஆண்டுகளாக இயக்குநராகவும், நடிகராகவும் திரைத்து... மேலும் பார்க்க

The U1niverse Tour: சென்னை முதல் துபாய் வரை கான்சர்ட் நடத்தும் யுவன் - எப்போது தெரியுமா?

இசை நிகழ்ச்சி நடத்தும் கலாசாரங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இசைக் கலைஞர்கள் வெறும் பாடல் பாடுவதோடு நிறுத்தி விடாமல், மேடைகளில் அதனை ஒரு கலை நிகழ்ச்சியாக அரங்கேற்றுகின... மேலும் பார்க்க

`` `ரமணா' படம் கமிட்டானப்போ அனுராக் காஷ்யப்புக்கு என் சப்போர்ட் தேவைப்பட்டது, அதான்...'' - நட்டி

கோடம்பாகத்தின் பிஸியான நடிகர்களின் லிஸ்டில் முக்கிய இடத்தில் இருக்கிறார் நடிகர் நட்டி. அவர், அருண் பாண்டியனுடன் இணைந்து நடித்திருக்கும் `ரைட்' படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இதைத் தாண்டி, 'கருப்பு... மேலும் பார்க்க