ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி.யை வீழ்த்த பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு!
சூப்பர் 4: ஷாஹீன் ஷா அசத்தல்; 133 ரன்கள் எடுத்தது இலங்கை!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்துள்ளது.
அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் அரைசதம் அடித்தார். ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஷாஹீன் ஷா அஃப்ரிடி வீசிய போட்டியின் இரண்டாவது பந்திலேயே குசால் மெண்டிஸ் ஆட்டமிழந்தார்.
அடுத்து மூன்றாவது ஓவரில் பதும் நிசாங்காவும் ஆட்டமிழக்க, பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி நிதானமான ஆட்டத்தை கையில் எடுத்தது.
இறுதிவரை பொறுமையாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 44 பந்துகளில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் ஷா 3 விக்கெட்டுகள், ஹுசைன் தலாத், ஹாரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.