செய்திகள் :

ஜாலி எல்.எல்.பி 3 படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை!

post image

ஜாலி எல்.எல்.பி 3 படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை விதித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அக்‌ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் செப்டம்பர் 19 அன்று வெளியான “ஜாலி எல்.எல்.பி 3” திரைப்படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில், “படம் வெளியாவதற்கு முன் அல்லது வெளியீட்டின் போது, புதிய வலைத்தளங்கள் அங்கீகாரமின்றி இப்படத்தை ஒளிபரப்பச் செய்தால், புகார் தரப்பினர் (ஜியோஸ்டார்) அவற்றின் விவரங்களை பதிலாளர் எண் 25 முதல் 45 வரை தெரிவிக்கலாம். அவர்கள் உடனடியாக, தாமதமின்றி, அவ்வலைத்தளங்களை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் நீதிமன்றம் கூறியது.

“இத்தகைய வலைத்தளங்களை தடுக்க தாமதமானால், புகார் தரப்பினர் பெரிய நிதி இழப்பை சந்திப்பார்கள், மேலும் அவர்களின் காப்புரிமை திருத்தமுடியாத விதத்தில் மீறப்படும்” எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், “சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பரப்பாத எந்தவொரு வலைத்தளமும் தவறுதலாக தடைசெய்யப்பட்டால், அந்தத் தரப்பும் நீதிமன்றத்தை அணுகி, தன்னிடம் சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பரப்பும் நோக்கம் இல்லை என்று உறுதி அளிக்கலாம்” என்றும் நீதிம்ன்றம் தெரிவித்தது.

Illegal broadcasting of Jolly LLB 3 banned!

தில்லி பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்ம மரணம்! 18 நாளாகியும் எப்ஐஆர்கூட இல்லை; தாய் கதறல்!

தில்லியில் பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.மாணவி மரணமடைந்து 18 நாள்களாகியும் காவல்துறை தரப்பி... மேலும் பார்க்க

நடுவா் மன்றங்களிலும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம்: நீதிபதி சூா்யகாந்த்

நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்கு மாற்றாக கருதப்பட்ட நடுவா் மன்றங்களிலும் தற்போது பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உச்... மேலும் பார்க்க

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: மேக்சிஸ் நிறுவனத்துக்கு தில்லி நீதிமன்றம் புதிதாக சம்மன்!

ஏா்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடா்பாக மலேசிய தொலைத்தொடா்பு நிறுவனமான மேக்சிஸ் நிறுவனத்துக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் புதிதாக சம்மன் பிறப்பித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம... மேலும் பார்க்க

கிழக்கு மாவட்டத்தில் தடை உத்தரவை மீறிய 9 போ் கைது!

தில்லி கிழக்கு மாவட்ட காவல் எல்லைக்குள் நுழைய தடைவிதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறிய 9 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். தடைஉத்தரவை மீறியவா்களை கைத... மேலும் பார்க்க

தில்லி மைதானத்தில் கலைநிகழ்ச்சிகள்: வாடகை கட்டணம் 50 % குறைப்பு!

தில்லியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வாடகை கட்டணங்கள் 40 முதல் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மைதானங்கள் பதிவு கட்டண குறைப்பை வரலாற்று சிறப்பு மிக்க முட... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனையாளா்களுக்கு சொந்தமான ரூ.27 கோடி சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல்காரா்களுக்கு எதிரான நிதி நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு சொந்தமான ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தில்லி காவல்துறை முடக்கியுள்ளதாக அதி... மேலும் பார்க்க