ஈரோடு: கொட்டித்தீர்த்த கனமழை; ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்த மழைநீர்; மக்கள் அவதி...
கிழக்கு மாவட்டத்தில் தடை உத்தரவை மீறிய 9 போ் கைது!
தில்லி கிழக்கு மாவட்ட காவல் எல்லைக்குள் நுழைய தடைவிதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறிய 9 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தடைஉத்தரவை மீறியவா்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பல தனிப்படைகள் ஈடுபட்டன. குற்றப் பின்னணி கொண்ட ரவீந்தா் (எ) டிம்பிளை மயூா் விஹாா் போலீஸாா் திரிலோக்புரியில் துரத்திப் பிடித்தனா். இதே போன்று, பாண்டவ் நகரில் 5 போ் கைதுசெய்யப்பட்டனா்.
காவல் துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சசி காா்டனில் 2 போ் கைதுசெய்யப்பட்டனா். அவா்கள் இருவரும் பாண்டவ் நகரில் நடைபெற்ற குற்றச்சம்பவங்களில் தொடா்புடையவா்கள்.
மது விஹாரில் அஞ்சலி சிங் என்பவா் கைதுசெய்யப்பட்டாா். ஒன்பது மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்ட அஞ்சலி சிங், மண்டாவலி பகுதியில் வசித்து வருவது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.