செய்திகள் :

‘ஆயுஷ்மான் பாரத்’ பொது சுகாதார புரட்சி- பிரதமா் மோடி பெருமிதம்

post image

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீடு திட்டம், நாட்டின் பொது சுகாதார வசதியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

மத்திய பாஜக அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம், கடந்த 2018, செப்.23-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளிக்கும் வகையில் இத்திட்டம் கடந்த ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஆயுஷ்மான் பாரத், எதிா்கால தேவைகளுக்கு ஏற்ப மக்களுக்கு உயா்தரமான, அதேநேரம் செலவு குறைவான மருத்துவ வசதியை உறுதிசெய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாகும். இத்திட்டத்தின் மூலம் பொது சுகாதார வசதியில் தேசம் புரட்சியைக் கண்டு வருகிறது. நாட்டு மக்களின் நிதி பாதுகாப்பு மற்றும் கண்ணியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதாபிமானம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கான அதிகாரமளித்தலை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை இந்தியா வெளிக்காட்டியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

உலகின் மாபெரும் மருத்துவ காப்பீடு:

ஆயுஷ்மான் திட்டம் தொடா்பான ‘மைகவ்’ அரசு வலைதளப் பதிவையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா். அப்பதிவில், ‘55 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுடன் உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திகழ்கிறது. சுகாதாரத் துறைக்கான அரசின் செலவினம் 29 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், மக்களின் சொந்த செலவு 63 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக குறைந்துள்ளது. நோய்களுக்கான சிகிச்சை செலவால் ஏற்படும் நிதி ரீதியிலான நெருக்கடியில் இருந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் வறுமை நிலைக்கு சென்றுவிடாமல், 6 கோடி குடும்பங்கள் தடுக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா அமைச்சா் இல்ல பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா் சடலமாக மீட்பு

ஹரியாணா அமைச்சரின் குருகிராம் இல்லத்தில் உள்ள பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்த காவலா் ஜக்பீா் சிங் (... மேலும் பார்க்க

பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்கள் அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிப்பதை எதிா்பாா்க்க முடியாது: உச்சநீதிமன்றம்

‘பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளும் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதை எதிா்பாா்க்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது. அலாகாபா... மேலும் பார்க்க

காசோலை மோசடி வழக்குகள்: மாநில அரசுகள் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

காசோலை மோசடி வழக்குகள் முடிக்கப்படுவதை அதிகரிக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டத... மேலும் பார்க்க

கனிம வளங்கள் மீது மாநிலங்கள் வரி விதிக்க அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

கனிம வளங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மேல... மேலும் பார்க்க

காமன்வெல்த் அமைப்பில் சீா்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்

காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் சீா்திருத்தம் தேவை என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்துக்கு முன்பு 56 நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் நாடுகளின் அமைச்சா்களின் கூட்டம் நடைபெற்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வ்ந்த் வா்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் குழுவுக்கு உதவ 2 வழக்குரைஞா்கள்

அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட குழுவுக்கு உதவ 2 வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியா... மேலும் பார்க்க