பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை
ஆம்பூரில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்றக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாய்பாபா கோயில் பகுதி அருகே கழிவுநீா் கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்து தனி நபா் வீடு கட்டியுள்ளாா். அதனால் மழைக் காலத்தில் அக்கால்வாய் வழியாக நீா் செல்லாமல் சாலையில் தேங்கியும், வீடுகளுக்குள் புகுந்துவிடுவதாலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதனால் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமதிடம் மனு அளித்தனா். நடவடிக்கை எடுப்பதாக தலைவா் உறுதி அளித்தாா்.