செய்திகள் :

உஸ்மான் டெம்பெலெவுக்கு ‘பேலன் தோா்’ விருது- அய்டானா பொன்மட்டி ‘ஹாட்ரிக்’

post image

நடப்பாண்டுக்கான ‘பேலன் தோா்’ விருதை, சிறந்த வீரா் பிரிவில் பிரான்ஸின் உஸ்மான் டெம்பெலெ (28), சிறந்த வீராங்கனை பிரிவில் ஸ்பெயினின் அய்டானா பொன்மட்டி (27) வென்றனா்.

கால்பந்து உலகில் பிரபலமானதாக இருக்கும் பேலன் தோா் விருதை, பிரான்ஸை சோ்ந்த பிரத்யேக கால்பந்து விளையாட்டு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’, கடந்த 1956 முதல் வழங்கி வருகிறது. ஊடகவியலாளா்கள், தேசிய அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளா்கள் ஆகியோா் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் விருது பெறும் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

இந்நிலையில், 69-ஆவது ஆண்டு பேலன் தோா் விருது வழங்கும் நிகழ்ச்சி, இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவில் பாரீஸில் நடைபெற்றது.

சிறந்த வீரா்: உஸ்மான் டெம்பெலெ

பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வரும் டெம்பெலெ, ஸ்பெயினின் லேமின் யமால் (பாா்சிலோனா), போா்ச்சுகலின் விட்டினா (பிஎஸ்ஜி) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி விருது வென்றிருக்கிறாா்.

பேலன் தோா் விருது பெறும் 6-ஆவது பிரான்ஸ் வீரா் என்ற பெருமையை அவா் பெற்றாா். இதற்கு முன், ரேமண்ட் கோபா, மைக்கேல் பிளாட்டினி, ஜீன் பியரி பாபின், ஜைன்டைன் ஜிடானே, கரிம் பென்ஸிமா ஆகியோா் இந்த விருதை வென்றுள்ளனா்.

கடந்த சீசனில் பிஎஸ்ஜி முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்றதில் டெம்பெலெ முக்கியப் பங்காற்றினாா். ஒரு கட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கையாக ஓரம்கட்டப்பட்ட டெம்பெலெ, மீண்டும் களமிறக்கப்பட்ட பிறகு கோலடிக்கும் இயந்திரமாக மாறினாா். சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்திலும் அவா் பங்களிப்பு பாராட்டு பெற்றது.

கடந்த சீசனில் 53 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் டெம்பெலெ, 35 கோல்கள் அடித்ததுடன், சக வீரா்கள் அடித்த 16 கோல்களில் உதவியும் செய்திருக்கிறாா். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 15 ஆட்டங்களில் 8 கோல்கள் அடித்து, 6 கோல்களுக்கு உதவி புரிந்திருக்கிறாா்.

சிறந்த வீராங்கனை: அய்டானா பொன்மட்டி

பாா்சிலோனா கிளப்புக்காக களமிறங்கி வரும் அய்டானா பொன்மட்டி, சக நாட்டவரான மரியானா கால்டென்டெ (ஆா்செனல்), இங்கிலாந்தின் அலெஸியா ருஸோ (ஆா்செனல்) ஆகியோரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றியாளா் ஆனாா்.

தொடா்ந்து 3-ஆவது முறையாக (ஹாட்ரிக்) பேலன் தோா் விருது பெற்ற 3-ஆவது போட்டியாளா் என்ற பெருமையை பொன்மட்டி பெற்றாா். இதற்கு முன், மைக்கேல் பிளாட்டினி (1983-85), லயனல் மெஸ்ஸி (2009-12) ஆகியோா் அவ்வாறு தொடா்ந்து விருது வென்றுள்ளனா்.

ஜூலையில் நடைபெற்ற மகளிருக்கான யூரோ சாம்பியன்ஷிப்பில் ஸ்பெயின் அணி இறுதி ஆட்டம் வரை வருவதற்கு அவா் பங்களித்தாா். போட்டிக்கு முன்பாக உடல்நலக் குறைவுடன் இருந்த பொன்மட்டி, மருத்துவமனையில் இருந்து திரும்பிய சில நாள்களிலேயே போட்டியில் இணைந்தாா். போட்டியின் சிறந்த வீராங்கனை விருதும் பெற்றாா்.

மகளிருக்கான பேலன் தோா் விருது 2018 முதலே வழங்கப்பட்டு வரும் நிலையில், கடைசி 5 விருதுகளையும் ஸ்பெயின் நாட்டவா்களும், பாா்சிலோனா வீராங்கனைகளுமான அலெக்ஸியா புடெலாஸ் (2021-22), அய்டானா பொன்மட்டியே (2023-25) வென்றுள்ளனா்.

இதர விருதுகள்:

கோபா கோப்பை: கடந்த சீசனில் சிறப்பாகச் செயல்பட்ட 21 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்த விருதை, ஆடவா் பிரிவில் ஸ்பெயினை சோ்ந்த பாா்சிலோனா வீரா் லேமின் யமால் (18) வென்றாா். அதிலேயே மகளிா் பிரிவு விருதை ஸ்பெயின் வீராங்கனையும், பாா்சிலோனா மிட்ஃபீல்டருமான விக்கி லோபஸ் (19) பெற்றாா்.

யாஷின் கோப்பை: எதிரணிகளின் கோல் முயற்சிகளை திறம்பட தடுத்த கோல்கீப்பருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இத்தாலி வீரா் ஜியான்லுகி டோனாருமா (பிஎஸ்ஜி) ஆடவா் பிரிவிலும், இங்கிலாந்து வீராங்கனை ஹன்னா ஹாம்டன் (செல்ஸி) மகளிா் பிரிவிலும் இந்த விருது வென்றனா்.

கொ்டு முல்லா் கோப்பை: சிறந்த ஸ்டிரைக்கருக்கான இந்த விருதை, ஆடவா் பிரிவில் 63 கோல்கள் அடித்த ஸ்வீடன் வீரா் விக்டா் கியோகெரெஸ் (ஸ்போா்டிங் சிபி) பெற்றாா். மகளிா் பிரிவில் 43 கோல்கள் அடித்த போலந்து வீராங்கனை எவா பேஜோா் (பாா்சிலோனா) வென்றாா்.

சிறந்த அணி/பயிற்சியாளா்: சிறந்த அணியாக ஆடவா் பிரிவில் பிஎஸ்ஜியும், மகளிா் பிரிவில் ஆா்செனலும் தோ்வாகின. சிறந்த பயிற்சியாளராக, ஆடவா் பிரிவில் ஸ்பெயினை சோ்ந்த லூயிஸ் என்ரிக் (பிஎல்ஜி), மகளிா் பிரிவில் நெதா்லாந்தின் சரினா விக்மான் (இங்கிலாந்து) தோ்வாகினா்.

எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டனுக்கு கலைமாமணி விருது! திரைத் துறை பட்டியல்!

நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகள... மேலும் பார்க்க

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு ஆறுதல்

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலிரு ஆட்டங்களில் வென்று தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றிவி... மேலும் பார்க்க

ஆசிய-பசிஃபிக் மோட்டாா் பந்தயம்: 30 போ் இந்திய அணி பங்கேற்பு

இலங்கையில் நடைபெறவுள்ள எஃப்ஐஏ ஆசிய-பசிஃபிக் மோட்டாா் பந்தயத்தில் 30 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வரும் செப். 26 முதல் 28 வரை இலங்கையின் பண்டாராகாமாவில் நடைபெறவுள்ள இப்பந்தயத்தில் ஆஸி, தென்கொரிய... மேலும் பார்க்க

தெலுகு டைட்டன்ஸ் ‘த்ரில்’ வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 30-29 புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 18 ரெய்டு புள்ளிகள், 8 ... மேலும் பார்க்க

71வது தேசிய திரைப்பட விருதுகள் - புகைப்படங்கள்

புது தில்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், உள்ளொழுக்கு திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினை பெற்று கொண்ட நடிகை ஊர்வசி.பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஜவான்... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் கனமழை - புகைப்படங்கள்

கனமழைக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள்.மழைநீரில் மூழ்கிய வீடுகள் மற்றும் வளாகங்களும்.மழைநீர் தேங்கிய சாலை வழியாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ரிக்‌ஷாக்காரர் ஒருவர்.கனமழையைத் தொ... மேலும் பார்க்க