மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு!
சென்னையில் நாளை (செப்.25) 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடைபெறுவதையொட்டி அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெலங்கானா சென்று இந்த விழாவுக்கான அழைப்பிதழை முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற கொண்டாட்ட விழா செப். 25 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தகவல் தெரிவித்தார்.
நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், விளையாட்டு சாதனையாளர்கள் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வில் அரசின் கல்வி சார்ந்த திட்டங்களில் பங்கேற்று பயன்பெற்றவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்வார்கள் என்றும் இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்றும் கூறியிருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப். 25 ஆம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இந்த விழா நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் ‘#நான்_முதல்வன்’, ‘#புதுமைப்_பெண்’, ‘#தமிழ்ப்_புதல்வன்’ உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்பாக சென்னையில் செப்டம்பர் 25ம் தேதி நடைபெறும் ‘#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் தெலங்கானா முதலமைச்சர் மாண்புமிகு திரு. ரேவந்த் ரெட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக… pic.twitter.com/nQ2ovDF6Bq
— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 24, 2025