மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
அரசு விடுதிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்
அரசு விடுதிகளில் உரிய ஆசிரியர்களை நியமித்து முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் உள்ள அரசு ஐடிஐ மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. "சமூகநீதி விடுதிகள்" என்று பெயர் வைப்பதைவிட, அந்த விடுதிகளின் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் "சமூகநீதி' இருக்க வேண்டும்.
இதேபோல, திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் ஓராண்டுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. அரசுப் பள்ளிகளைத் தரமாகக் கட்டமைப்பதிலும், அரசு மாணவர் விடுதியில் ஆசிரியரை நியமனம் செய்து முறையாக நிர்வகிப்பதிலும் அரசு முனைப்பு காட்ட வேண்டும் என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.