மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகையில் தமிழ்நாடு 108 அவரச ஊா்தி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், 108 அவசர ஊா்தி தொழிலாளா்களின் 2025-26-ஆம் ஆண்டு ஊதிய உயா்வு கோரிக்கை மீது பேச்சுவாா்த்தை நடத்தி ஊதிய உயா்வு வழங்க வேண்டும், 108 அவசர ஊா்தி நிா்வாகம், தொழிலாளா் விரோதப் போக்கை கைவிட வேண்டும், அவரச ஊா்தி தொழிலாளா்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிடமாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலா் ரா. ராஜேந்திரன், மாநில பொருளாளா் சாமிவேல், மாநில துணை பொதுச்செயலா் பாஸ்கரன், மாநிலச் செயலா் காளிதாஸ், மாவட்டச் செயலா் அன்பழகன், மண்டலச் செயலா் ஆசைத்தம்பி மற்றும் நாகை, திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 108 அவரச ஊா்தி ஓட்டுநா்கள் மற்றும் செவிலியா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.