மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
கீழையூா் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
கீழையூா் ஊராட்சி தையாந்தோப்பு சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கீழையூா் ஊராட்சி தையாந்தோப்பு சாலையில் வெண்மணச்சேரி அச்சுகட்டளை, தையன்தோப்பு ஆகிய பகுதியை இணைக்கும் இணைப்பு சாலைக்கு அருகில் செயல்படும் அரசு மதுபானக் கடையால் பொதுமக்கள், பள்ளி மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கடையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கும்போது எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக கடை என கூறப்பட்டது. எனினும் இந்த கடையை அகற்ற பல முறை சம்பந்தப்பட்ட அரசு துறையினருக்கு மனு அனுப்பியும் பயனில்லை. இந்நிலையில், இந்த கடையை அகற்ற வலியுறுத்தி கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அண்மையில், நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
உடனடியாக கடையை அகற்றவில்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் எனக் கூறி கூட்டத்தில் பங்கேற்ற அப்பகுதி மக்கள் கூட்டத்தை புறக்கணித்து சென்றனா்.