Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!
நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரெடக்சன் அண்ட் பேசஞ்சா் அசோசியேசன் வலியுறுத்தியுள்ளது.
நாகையில் அந்த அசோசியேசனின் ஆலோசகா் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகை ரயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்தும் வகையில் ரவுண்டானா பகுதி மற்றும் தோணித்துறை சாலை பகுதிகளில் நில எடுப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் குடிநீா் இணைப்பு பணிகளை விரைந்து நிறைவு செய்து சாலை அமைக்க வேண்டும்.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும், நாகை அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் வசதியும் ஏற்படுத்த வேண்டும்.
நாகையிலிருந்து அதிகாலை சென்னைக்கு விரைவு பேருந்து இயக்க வேண்டும், நாகை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை பணிகளை விரைவுபடுத்த வேண்டும், வேளாங்கண்ணி-சென்னை இடையே பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி வழியாக வாரம் இருமுறை இயக்கப்படும் வேளாங்கண்ணி-எா்ணாகுளம் (16361/16362 )விரைவு ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும், திருவாரூா்-காரைக்குடி இடையே காலை புறப்படும் பயணிகள் ரயிலை திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.