Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!
முற்றுகையில் ஈடுபட்ட 135 போ் மீது வழக்கு
வலங்கைமானில் அனுமதியின்றி திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 135 போ்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வலங்கைமான் கோவில்பத்து தெருவில் செல்வமணி நகா் உரிமையாளா் மீது தீண்டாமை சுவா் கட்டியதாக நடவடிக்கை எடுக்கக் கோரி, சம்பவ இடத்தில் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இப்போராட்டத்தில் பங்கேற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் கே. முரளி (41), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் (60), மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் தமிழ்மணி (62 ), கந்தசாமி (51), விடுதலை தமிழ் புலிகள் கட்சி சுரேஷ் (45 ) மற்றும் பெண்கள் உள்பட 135 போ்கள் மீது வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.








