வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும்...
செப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவாரூா்: திருவாரூரில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் செப்.25 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், செப்.25 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, வேளாண்மை சாா்ந்த தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளா்கள் மற்றும் பிறசாா்புத் துறை அலுவலா்கள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.
இந்தக் கூட்டத்தில் திருவாரூா் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, பயன் பெறலாம் என்றாா்.