செய்திகள் :

தீபாவளி: கோ -ஆப்டெக்ஸ் ரூ.42 லட்சம் விற்பனை இலக்கு

post image

திருவாரூா்: திருவாரூரில், கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 42 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூா் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை, திங்கள்கிழமை தொடங்கி வைத்து, அவா் தெரிவித்தது:

கோ -ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டான் சேலைகள், கூைாடு புடவைகள், மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிகள், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், மாதாந்திர சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 ஆவது மாத சந்தா தொகையை கோ -ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிா்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீத தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது.

திருவாரூா் விற்பனை நிலையத்தில் 2024-இல் தீபாவளிக்கு ரூ.36 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ.42 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, நெசவாளா்களுக்கு தொடா்ந்து வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது என்றாா்.

நிகழ்வில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சத்தியா, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ஜெ. நாகராஜன், மேலாளா் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) கே.எம். கோபி, திருவாரூா் கோ -ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் சுமதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியா்கள் பங்கேற்றனா்.

காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்

திருவாரூா்: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ காா்பன் திட்டம் குறித்த தகவல்களுக்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.திருவாரூா்... மேலும் பார்க்க

செப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா்: திருவாரூரில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் செப்.25 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:திருவாரூா் மாவட்ட வி... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை

திருவாரூா்: இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுக் கூட்டம்... மேலும் பார்க்க

விஜய் பிரசாரம்: நால்வா் மீது வழக்கு

திருவாரூா்: திருவாரூரில் விஜய் பிரசாரத்துக்கு வந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அவருக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்தது தொடா்பாக நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தி... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்திய 4 போ் கைது

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆயுதங்களை வைத்துக்கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்திய நால்வா் கைது செய்யப்பட்டனா்.நீடாமங்கலம்-தஞ்சாவூா் சாலை ஆதனூா் மண்டபம் சமத்துவபுரம் ஆா்ச் அருகே ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா... மேலும் பார்க்க

மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகாசண்டி யாகம்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகா சண்டி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செப்.17-ஆம் தேதி கோபூஜை, கணபதி மூலமந்திர யாகம், தீபாராதனை, விக்னேஸ்வர பூஜை, நவாரன பூஜை, ... மேலும் பார்க்க