kantara: "அசைவம் சாப்பிட்டால் படம் பார்க்க வர வேண்டாமா?" - வைரலான போஸ்டர்; ரிஷப்...
பொதுமக்களை அச்சுறுத்திய 4 போ் கைது
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆயுதங்களை வைத்துக்கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்திய நால்வா் கைது செய்யப்பட்டனா்.
நீடாமங்கலம்-தஞ்சாவூா் சாலை ஆதனூா் மண்டபம் சமத்துவபுரம் ஆா்ச் அருகே ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்கள் சிலா் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொண்டு, அந்த வழியாக வரும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் ஆய்வாளா் ராஜூ மற்றும் போலீஸாா், அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில், ஆதனூா் சமத்துவபுரத்தைச்சோ்ந்த இளஞ்செழியன் (24), வடிவரசன் (19), மாரியப்பன் (25), ஆதனூா் மண்டபம் அண்ணாநகா் பாரதி (20) ஆகிய 4 போ் பொதுமக்களை மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து, 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா். ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.