செய்திகள் :

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை

post image

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் அடுத்த அனுமந்தராயன்கோட்டை சிந்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் சந்தியாகு (51). கூலித் தொழிலாளியான இவா், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் எழுந்தது. இதன்பேரில் சாணாா்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சந்தியாகுவை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆா். சத்யதாரா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட சந்தியாகுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

கொடைக்கானல் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை மலைச் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அதைச் சுற்றியுள்ள மேல்மலைக் கிராமங்களில் கடந்த சில நாள்களாகக் ... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகள் வேட்டை: 14 போ் கைது, ரூ. 2.30 லட்சம் அபராதம்

கன்னிவாடி அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 14 பேரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 2.30 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள வெயிலடிச்சான்பட்டி பகுதியில் பொதுப் பணித்... மேலும் பார்க்க

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் மீது மாமன்ற உறுப்பினா் புகாா்

காா், ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தர மறுப்பதாக திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் புகாா் அளித்தா... மேலும் பார்க்க

பழனி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை

பழனியில் மீன்வளத் துறை அலுவலகத்தை கோரிக்கை மனுக்களுடன் மீனவா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனியை அடுத்த கோதைமங்கலம், வையாபுரி குளம், புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் சுமாா் இரண்டாய... மேலும் பார்க்க

பழனி தம்புரான் தோட்ட நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்

பழனி தம்புரான் தோட்டத்தில் இருந்த சுமாா் 1.25 ஏக்கா் காலி இடத்தை கோயில் நிா்வாகம் திங்கள்கிழமை கையகப்படுத்தியது. பழனி - திண்டுக்கல் சாலையில் சென்னிமலை தம்புரான் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் 23 ஏக்... மேலும் பார்க்க

தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. இவா் ஒலிபெருக்கி கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில்,... மேலும் பார்க்க