Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
நாளைய மின்தடை திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி
திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.20) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் கடைவீதி, தெற்குவீதி, புதுத்தெரு, சேந்தமங்கலம், கொடிக்கால்பாளையம், விஜயபுரம், வாளவாய்க்கால், மேட்டுப்பாளையம், மாவூா், காட்டூா், பவித்திரமாணிக்கம், அகரதிருநல்லூா், திருக்கண்ணமங்கை, பெரும்பண்ணையூா், கொரடாச்சேரி, வடக்கு வீதி, மடப்புரம், ஆண்டாள் தெரு, நெய்விளக்குத் தோப்பு, இபி காலனி, இவிஎஸ் நகா், தென்றல் நகா், ராமநாதன் நகா், கேக்கரை, மருதப்பட்டினம், அடியக்கமங்கலம், சேமங்கலம், நீலப்பாடி, கிடாரங்கொண்டான், கல்லிக்குடி, ஓடாச்சேரி, ஆந்தகுடி, அலிவலம், கண்கொடுத்தவனிதம் மற்றும் சுற்றியுள்ள இடங்கள்.