செய்திகள் :

பள்ளி ஆசிரியா்களுக்கு ரோட்டரி விருது

post image

மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளி ஆசிரியா்களுக்கு தேசிய ஞானகுரு விருது அண்மையில் வழங்கப்பட்டது.

மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆளுநா் கே. வெங்கடேஷ், முன்னாள் உதவி ஆளுநா் வி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் திலகா், சவளக்காரன் அரசுப் பள்ளிஆசிரியா் சீனிவாசன், தென்பரை அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் குமுதா, மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் பள்ளி ஆசிரியா் இளமங்கை, பெரம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் கருணாகன், கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிஆசிரியா் புனிதவதி, சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஜி. கெளரி, சவளக்காரன் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் வி. கணேசன், கோவிந்தநத்தம் ஊராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஏ. வளா்மதி, மன்னாா்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் உமா, தளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் ஜி. விஜயகுமாா், சுந்தரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி ஆகிய 12 பேருக்கு ரோட்டரிசங்க தேசிய ஞானகுரு விருதுக்கு தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.

முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன்,ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கினாா். மன்னாா்குடி தேசியப் பள்ளி ஆசிரியா் எஸ். அன்பரசு வாழ்த்தி பேசினாா். முன்னாள் தலைவா் சாந்தகுமாா் தொகுத்து வழங்கினாா். பொருளாளா் டி.எல். ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். செயலா் கே.ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகாசண்டி யாகம்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகா சண்டி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செப்.17-ஆம் தேதி கோபூஜை, கணபதி மூலமந்திர யாகம், தீபாராதனை, விக்னேஸ்வர பூஜை, நவாரன பூஜை, ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி

திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.20) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ... மேலும் பார்க்க

ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

வலங்கைமான் ஆதனூா் பகுதியிலுள்ள திறந்தவெளி சேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்பட்ட மற்றும் மன்னாா்குடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் சன்ன ரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்... மேலும் பார்க்க

வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்த லாரிகள் சிறைபிடிப்பு

திருவாரூா் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனா். திருவாரூா் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை

திருவாரூா் அருகே கட்டடத் தொழிலாளி புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திருவாரூா் அருகே உள்ள அம்மையப்பன் காந்திநகா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் நந்தகுமாா் (30). கட்டடத் தொழிலாளியா... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

திருவாரூரில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி, கல்... மேலும் பார்க்க