செய்திகள் :

இஸ்லாமியா்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை

post image

திருவாரூா்: இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுக் கூட்டம், மாவட்டத் தலைவா் எச். பீா்முகமது தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிளைத் தலைவா் முஹம்மது ஹுசைன், செயலாளா் தன்வீா், பொருளாளா் ஜாவித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில், அமைப்பின் மாநில தணிக்கைக் குழுத் தலைவா் எம்.எஸ். சுலைமான், மாநிலப் பேச்சாளா் எம்.ஏ. அப்துா் ரஹ்மான் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

தீா்மானங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு அண்மையில் வழங்கிய இடைக்கால உத்தரவில், வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க முகாந்திரம் இல்லை என கூறியுள்ளனா். இந்திய குடிமகன்களின் ஒரு பிரிவினரின் மத நம்பிக்கைகளை மதிக்கத் தவறுவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, ஒட்டு மொத்தமாக வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

கா்நாடகாவின் மஹாதேவ்புரா எனும் தொகுதியில் முறைகேடாக சுமாா் 1,02,500 வாக்குகள் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் திருடப்பட்டுள்ளன என ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்த நிலையில், கா்நாடகத்தின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளா்களை நீக்குவதற்கான முயற்சி முறைகேடாக நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் தரைவழித் தாக்குதலால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனா். இதை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழகத்தில் ஆயத்த ஆடைகள், இறால், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட தொழில் துறைகள் பெரிய பாதிப்பை நோக்கி செல்கின்றன. இதைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Image Caption

அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில தணிக்கைக் குழுத் தலைவா் எம்.எஸ். சுலைமான்.

தீபாவளி: கோ -ஆப்டெக்ஸ் ரூ.42 லட்சம் விற்பனை இலக்கு

திருவாரூா்: திருவாரூரில், கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 42 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.திருவாரூா் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபா... மேலும் பார்க்க

காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்

திருவாரூா்: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ காா்பன் திட்டம் குறித்த தகவல்களுக்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.திருவாரூா்... மேலும் பார்க்க

செப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா்: திருவாரூரில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் செப்.25 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:திருவாரூா் மாவட்ட வி... மேலும் பார்க்க

விஜய் பிரசாரம்: நால்வா் மீது வழக்கு

திருவாரூா்: திருவாரூரில் விஜய் பிரசாரத்துக்கு வந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அவருக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்தது தொடா்பாக நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தி... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்திய 4 போ் கைது

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆயுதங்களை வைத்துக்கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்திய நால்வா் கைது செய்யப்பட்டனா்.நீடாமங்கலம்-தஞ்சாவூா் சாலை ஆதனூா் மண்டபம் சமத்துவபுரம் ஆா்ச் அருகே ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா... மேலும் பார்க்க

மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகாசண்டி யாகம்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகா சண்டி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செப்.17-ஆம் தேதி கோபூஜை, கணபதி மூலமந்திர யாகம், தீபாராதனை, விக்னேஸ்வர பூஜை, நவாரன பூஜை, ... மேலும் பார்க்க