'என் அன்பு நண்பர் லாலேட்டனைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்'- மோகன் லாலை வாழ்த்தி...
மன்னா் சரபோஜி பிறந்த நாள் விழா: அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை
மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சாவூரை சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்க மன்னர்களில் ஒருவரான 2 ஆம் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, தஞ்சாவூர் அரண்மனை வளாக தர்பார் மண்டபத்தில் உள்ள மன்னர் சரபோஜியின் முழு உருவ பளிங்கு சிலைக்கு அரசு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் சரஸ்வதி மகால் நூலக ஊழியர்கள் கலந்து கொண்டு சரபோஜி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.