மக்களால் மாற்றப்பட்ட முடிவு! டிரம்ப்பை விமர்சித்ததால் அதிரடியாக நிறுத்தப்பட்ட ட...
கம்பி கட்ன கதை படத்தின் முதல்பார்வை போஸ்டர்!
நடிகர் நட்டி நடராஜின் கம்பி கட்ன கதை என்ற புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்.17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் நட்டி நடராஜ் யூத் படத்தில் சிறிய தோற்றத்தில் அறிமுகமானாலும் ’சதுரங்க வேட்டை’தான் அவருக்கு அடையாளமாக இருக்கிறது.
மகாராஜா படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. நிறம் மாறும் உலகில் என்ற படம் கடைசியாக வெளியானது. சூர்யாவின் கருப்பு படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், உத்ரா புரடக்ஷனில் ராஜ்நாதன் பெரியசாமி ’கம்பி கட்ன கதை’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நட்டி நடராஜ் உடன் சிங்கம் புலி, சாம்ஸ், முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சனி நாயர் நடித்துள்ளார்கள்.
Breaking into a whole new world of laughter!
— Rajanathan Periyasamy (@PRN83078207) September 24, 2025
Kambi Kadna Kadhai – Get ready for non-stop comedy explosions, this Diwali!
Here’s the First Look Poster!#KambiKadnaKadhai#FirstLook#ComedyFiesta#kkk@natty_nataraj#Singampuli@ACTOR_CHAAMS@imukeshravi@sreerranjinipic.twitter.com/PvLiA5Uvpw