இது நடந்தால் மட்டுமே 96 - 2 உருவாகும்: பிரேம் குமார்
இயக்குநர் பிரேம் குமார் 96 - 2 குறித்து பேசியுள்ளார்.
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.
அடுத்ததாக, நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், கொஞ்சம் தாமதமாகவுள்ளது.
இதற்கிடையே, 96 திரைப்படத்தின் ரசிகர்கள் ராமும் (விஜய் சேதுபதி) ஜானுவும் (த்ரிஷா) என்ன ஆனார்கள் என பிரேம் குமாரிடம் கேட்பதுடன் 96 - 2 படத்திற்காகவும் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பிரேம் குமார், “96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன். நான் எழுதியதிலேயே மிகச் சிறப்பாக வந்த கதை இதுதான். பலரும் படித்துவிட்டு 96-யை விட நன்றாக இருக்கிறது என்றனர்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கதையைப் படித்துவிட்டு சில லட்சங்கள் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை அணிவித்தார். கதைக்காக மட்டுமே கிடைத்த பரிசு அது. ஒரு எழுத்தாளனுக்கு இதைவிட என்ன வேண்டும்? ஆனால், 96 திரைப்படத்தில் நடித்தவர்களை வைத்தே 96 - 2 பாகத்தை எடுப்பேன். அப்படியில்லை என்றால் 96 - 2 உருவாகாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டனுக்கு கலைமாமணி விருது! திரைத் துறை பட்டியல்!